Sunday, November 3, 2024

GENERAL TALKS - 004 - கொடியோரின் உலகத்தில் நம்பிக்கை வைக்க கஷ்டமாக இருக்கிறது.




இந்த காலத்தில் யார் மேலும் அவ்வளவாக நம்பிக்கை வைக்க முடியாது. கெட்ட எண்ணங்களே அவர்களின் மனதில் நிரப்பப்பட்டு இருக்கிறது. இன்னொருவருடைய வாழ்க்கையை எப்படி பறிக்கலாம் என்றுதான் ஹோட்டல் அறையை எடுத்து ரூம் போட்டு யோசித்து வேலை பார்க்கிறார்கள். 

நம்முடைய வாழ்க்கையில் இன்னொருவர் மேலே வைத்து இருக்கும் அன்பின்  அடிப்படையிலான நம்பிக்கை உண்மையாக இருக்கவேண்டும் என்பதுதான் சேர்ந்து சாதிப்பதில் மிகவும் முக்கியமானது இங்கே நமக்கு ஆதரவாக இருப்பவர்களின் நம்பிக்கையும் நம்முடைய தனிப்பட்ட முயற்சிகளில் இவர்களுடைய ஆதரவும் இருந்தால் கண்டிப்பாக எல்லாமே நல்லதாகவே நடக்கும். இருந்தாலும் நம்பிக்கையான ஆட்களை நாம்தான் தேடவேண்டும். இரத்தம் உறிஞ்சும் அட்டை பூச்சிகளை போல நம்முடைய சக்திகளை உறிஞ்சிக்கொண்டு போலியான அன்பையும் ஆதரவையும் காட்டும் ஆட்களால் பிரமாதமான விஷயங்கள் எதையும் சாதிக்க முடியாது. 

இன்னொருவரின் சாதனைக்கான பலன்களை உறிஞ்சிக்கொண்டு இவர்கள் சந்தோஷமாக இருப்பதால்தான் இந்த நம்பிக்கைக்கான போஸ்ட்டில் இவர்களை போன்றவர்களை நம்பவேண்டாம் என்று தெரிவித்துக்கொள்கிறேன். நம்பிக்கையான மக்கள் இருந்தால் நம்முடைய வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும் என்பதெல்லாம் சரிதான். 

என்னுடைய வாழ்க்கையை எனக்கு நினைவு தெரிந்தது முதல் கொஞ்சமாவது நம்பிக்கை வைத்தவர்கள் என்று யாருமே இருந்ததே இல்லை என்று நம்முடைய கதாநாயகர் கலங்குகிறார். பெரும்பாலான நேரங்களை மற்றவர்களை கஷ்டப்பட்டு காப்பாற்றினால் அவர்களே நம்மை முதுகில் குத்துவார்கள் இதனால் இழப்பாலும் பெரும் தனிமையிலும் கொடூரமான குற்ற உணர்வில் மட்டும்தான் களைத்து வாழ்க்கையே வேண்டாம் என்று நம்முடைய கதாநாயகர் இவர்களை விட்டு பிரியவே வேண்டும் என்றுதான் பட்ட கஷ்டத்துக்காக இறுதியில் ஒரு முடிவை எடுப்பார்

எந்த ஒரு வேலையும் செய்யாமல் களைத்து போகச் சொல்லி இன்னொருவரை களிப்பின் சபலத்துக்கு ஆளாக்குவது இந்த உலகத்துக்கு கைவந்த கலை. இந்த வாழ்க்கையில் கார்ப்பரேட் நிறுவனங்களோ அல்லது முட்டாள்தனமான பேராசை ஆட்சியாளர்களோ இவர்களை தாங்களே பிரபஞ்சத்தின் சக்தியாளர்கள் என்று நினைப்பதால் பொது மக்களோடு சேர்ந்து இவர்கள் பண்ணும் தில்லாலங்கடி கொள்கைகளால் நாமும் மிகவும் கஷ்டப்படுத்தப்பட்டு கொண்டுதான் இருக்கிறோம். 

இந்த அதிகார தரப்பில் இருப்பவர்களில் தங்கமான மனிதர்களும் இருந்தாலும் ஒரு சில முட்டாள் பேரசைக்கார மக்கள் பூமி படத்தில் இடம்பெற்ற வில்லனை போல எதிர்க்கக்கூடிய யாராக இருந்தாலும் அவர்களுடைய சக்திகள் அனைத்துமே கொஞ்சமாக பறிக்கப்பட்டு கடைசி காலங்களில் அவர்களுடைய எந்த விதமான சக்திகளும் இல்லாமல் சத்துக்களற்ற சாப்படை சாப்பிட்டு அடிமையாக வாழ வேண்டும் என்று ஒரு கேவலமான வாழ்நாள் லட்சியத்தை வைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.



No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...