Friday, November 22, 2024

GENERAL TALKS - இந்த வாழ்க்கையின் பிரச்சனைகளை சமாளிப்பது எப்படி - 2 !




பொதுவாக மனித இயல்பே என்னவென்றால் நாம் யாரையாவது நேசிக்க முடியவில்லை என்றால் போலியாக நேசிப்பது போல நடிக்க ஆரம்பித்துவிடுவதுதான். இங்கே நம்பிக்கையில்லாமல் போலி புன்னகை கொடுக்கும் யாருக்குமே அவர்களை விட மேலான நிலையில் நாம் இருக்க வேண்டும் என்று அவர்களுடைய மனம் ஆசைப்படுவதில்லை. இந்த ஆணவத்தாலும் திமிரினாலும் கண்டிப்பாக ஒரு நாள் அவர்கள் அழியப் போகிறார்கள். கடைசி காலங்களில், அவர்களுக்கு என்று யாருமே இருக்கப்போவது இல்லை. மக்கள் எப்போதும் தொழில் செய்து முன்னேறி நிறைய விஷயங்களை காசு கொடுத்து வாங்கவேண்டும் என்று ஆசைப்படுவது மிகப்பெரிய குற்றமாக கருதுகிறார்கள். இவ்வுலகில் நிறைய விஷயங்களை காசு கொடுத்து வாங்கி அனுபவிப்பவர்கள் மட்டும்தான் நன்றாக இருக்கிறார்கள். கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்யாமல் மூளையை கசக்கி யோசித்து வேலை பார்த்தவர்கள் நன்றாக இருக்கிறார்கள். இவர்களை பார்த்துதான் நாமும் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஆனால், முன்னேற எண்ணமே இல்லாமல் காற்றோடு மழை காகிதம் (நெகிழி காகிதம்) போல வாழ்க்கையில் நோக்கம் இல்லாமல் பறந்துகொண்டு இருக்கும் வாழ்க்கைக்கு பயந்தவர்களுக்கு நம்முடைய இந்த பொதுவான ஆசை ஒரு பேராசை என்றும் நாம் உயர்வு அடைய தகுதியற்ற  ஆட்கள் என்றுதான் தோன்றுகிறது. மனிதன் குரங்காக இருக்கும்போதே சுதந்திரத்துக்கும் தனக்கு உரிமையான பொருட்களுக்கும் நன்றாக சண்டை போட்டு இருக்கிறான் என்பதை நினைவில் கொள்க ! வலிமையான பலமும் மிகப்பெரிய அறிவும் இருந்தால் மட்டும்தான் இங்கே வெற்றியடைய முடியும்.  ஒரு ஒரு நாளும். வலியுடன் சாப்பிட, வலியுடன் குளிக்க, வலியுடன் தூங்க வேண்டியது போன்ற ஒரு நிலை எந்த மனிதனுக்கும் மிகவும் பரிதாபகரமானது. இது போதாது என்று நேசிப்பவர்களுடைய துரோகங்களில் மனம் மிகவும் கஷ்டப்படுகிறேன். நம்முடைய முயற்சிகள் சக்திவாய்ந்த ஆட்களால் தடுக்கப்பட்டது வீணாகப் போகும்போது கோபப்படாமல் இருப்பது முட்டாள்தனம். நம்முடைய உணவு , உடை , இருப்பிடம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த நாம் இப்படி கோபப்படுவது கண்டிப்பாக நாம் செய்ய வேண்டிய ஒரு கடமை ! - இதுவுமே பிரச்சனைகளை தீர்க்கவேண்டும்என்றால் கட்டாயமான செயல்முறை என்பது இந்த வலைப்பூவின் கருத்து. இன்னுமே இந்த வலைப்பூவை கண்டிப்பாக மேம்படுத்தியே ஆகவேண்டும் !



No comments:

Post a Comment

தனிம வரிசை அட்டவணை - அணு எண் - நிறை எண் - கட்டமைப்பு ! [00005]

  1. Hydrogen (H) - 1.008 2. Helium (He) - 4.0026 3. Lithium (Li) - 6.94 4. Beryllium (Be) - 9.0122 5. Boron (B) - 10.81 6. Carbon (C) - 12....