Saturday, November 2, 2024

CINEMA TALKS - MEYYALAGAN - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 


இந்த மாதிரி ஒரு நல்ல BUDDY - COMEDY படத்தை நம்முடைய தமிழ் சினிமாவில் பார்த்து வெகு நாட்கள் ஆகிவிட்டது. கடைசியாக அன்பே சிவம் படத்தில் இதுபோன்று ஒரு காட்சி அமைப்பை நம்மால் பார்க்க முடிந்தது. மெய்யழகன். சொந்தக்காரர்களின் சதிகளால் இருபது வருடங்களுக்கு முன்னால் கிராமத்தில் இருக்கும் அவர்களின் சொந்த வீட்டை விட்டு வெளியே அனுப்பப்படுகிறார்கள் அரவிந்த்தின் குடும்பத்தினர். இதனால் மெட்ராஸ்ஸில் ஸ்போர்ட்ஸ் கோச் வேலை பார்த்து சராசரியான ஒரு மிட்டில் கிளாஸ் லைஃப் வாழும் அரவிந்த் ஒரு கட்டத்தில் மனதுக்கு நெருக்கமான ஒரு சொந்தக்கார சகோதரியின் திருமணத்துக்காக சொந்த ஊருக்கு கட்டாயமாக ஒரு நாள் வந்தே ஆகவேண்டும் என்பதால் சொந்த ஊருக்கு வருகிறார். அப்போது சந்திக்கும் பெர்ஸனாலிட்டிதான் கார்த்திக். இவரோடு ஒரு நாள் கிராமத்து வாழ்க்கையை ஸ்பெண்ட் பண்ணிக்கொண்டு லைஃப்பில் சில முக்கியமான விஷயங்களை தெரிந்துகொள்ளும் ஒரு இண்டரெஸ்ட்டிங் ஜெர்னிதான் இந்த மெய்யழகன் திரைப்படம். சொந்தக்காரர்கள் இந்திய வம்சாவளி கிங் கோப்ரா நாகங்களை போல விஷத்தோடு அலைந்துகொண்டு இருக்கிறார்கள் என்று பொதுவான கருத்துக்களை உடைத்து உண்மையாக அன்பு காட்டும் சொந்தக்காரர்களும் இருக்கிறார்கள் என்று ஒரு செம்ம மெசேஜ் படத்தில் இயக்குனர் சொல்லி இருக்கிறார். பட்ஜெட் பணத்தை பார்த்து பார்த்து செலவு செய்து இருக்கிறார். பெரிய பாக்ஸ் ஆபீஸ் எதிர்பார்ப்பு இருந்தாலும் ஒரு டீஸன்ட்டான வெற்றியைத்தான் இந்த படத்துக்கு கொடுத்து இருக்கிறார்கள். இந்த படங்கள் எல்லாம் கண்டிப்பாக 100 நாட்கள் திரையில் இருக்க வேண்டிய படம் என்பதுதான் நமது வலைப்பூ கம்பெனியின் கருத்து ! 

No comments:

ARC - 085 - பொறுப்புகளை எடுத்து செய்தல் !

  ஒரு காலத்தில் மிகவும் வசதி படைத்த ஒரு படகின் உரிமையாளர் அதை பெயிண்ட் அடித்து அழகாக்க விரும்பி ஒரு பெயிண்ட் காண்ட்ராக்டரிடம் பணியை ஒப்படைத்...