புதன், 13 நவம்பர், 2024

MUSIC TALKS - UNNODU VAAZHATHA VAAZHVENNA VAAZHVU - EN UL NENJU SOLKINDRATHU ! - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




உன்னோடு வாழாத 
வாழ்வென்ன வாழ்வு ?
என் உள் நெஞ்சு 
சொல்கின்றது

பூவோடு பேசாத 
காற்றென்ன காற்று ?
ஒரு பூஞ்சோலை 
கேட்கின்றது

மண்ணில் ஏன் ? ஏன் ? ஏன் ?
நீயும் வந்தாய்
எந்தன் பெண்மை 
பூப்பூக்கவே

நான் பிறக்கும் முன்னே 
அட நீ பிறந்ததேன்
நான் பிறக்கும்போது 
நீ உந்தன் கையில் 
என்னை ஏந்தத்தானோ ?


மெல்லிய ஆண்மகனை 
பெண்ணுக்குப் பிடிக்காது
முரடா உனை ரசித்தேன்
தொட்டதும் விழுந்து விடும் 
ஆடவன் பிடிக்காது
கர்வம் அதை மதித்தேன்

முடி குத்தும் உந்தன் மார்பு 
என் பஞ்சு மெத்தையோ ?
என் உயிர் திறக்கும் முத்தம் 
அது என்ன வித்தையோ ?

உன்னைப் போலே 
ஆண் இல்லையே
நீயும் போனால் 
நான் இல்லையே

நீர் அடிப்பதாலே 
நீர்  நழுவவில்லையே
ஆம் நமக்குள் ஊடல் இல்லை

\
நீ ஒரு தீயென்றால் 
நான் குளிர் காய்வேன்
அன்பே தீயாயிரு
நீ ஒரு முள்ளென்றால் 
நான் அதில் ரோஜா
அன்பே முள்ளாயிரு

நீ வீரமான கள்ளன் 
உள்ளூரும் சொல்லுது
நீ ஈரமான பாறை 
என் உள்ளம் சொல்லுது

உன்னை மொத்தம் 
நேசிக்கிறேன்
உந்தன் மூச்சை 
சுவாசிக்கிறேன்
நீ வசிக்கும் குடிசை 
என் மாடமாளிகை
காதலோடு பேதமில்லை



கருத்துகள் இல்லை:

「 ✦ ​🇬​​🇪​​🇳​​🇪​​🇷​​🇦​​🇱​ ​🇹​​🇦​​🇱​​🇰​​🇸​ ✦ 」- #18

  இந்த காலத்து அரசியல்வாதிகள் ஒரு விஷயத்தில் தெளிவாக இருக்கிறார்கள், பிரிந்து இருக்கும் சின்ன சின்ன கூட்டங்களை ஆட்சி செய்து அதிகாரத்தில் கொண...