Wednesday, November 6, 2024

SPECIAL TAKS - WHY DC MOVIES FLOP SOMETIMES - TAMIL ANALYSIS - வேற லெவல் கம்பெரிஸன் !!




மார்வெல் சினிமாடிக் யூனிவர்ஸின் கன்டினுவிட்டி கதை அந்த படங்கள் வெற்றி அடைய சிறப்பான காரணமாக இருக்கிறது மேலும் மக்களின் லைஃப் உடன் பொருந்தி பார்த்துக்கொள்ளும் கேரக்டர்கள், டி.சி. படங்களில் இல்லை. படம் வரிசைகளில் தேவையை இல்லாத காட்சிகள்தான் இருந்தது. ஒவ்வொரு கதையும் சம்மந்தமே இல்லாமல் தனியாக இருந்தது, இதனால் ரசிகர்கள்  புதிதாக எதுவுமே இல்லாமல் சலித்து போனார்கள் !  கதை மற்றும் திரைக்கதையில் பல குழப்பம் இருந்தது. ஒரு சில படங்களில் கதை மிகப்பெரியதாக இருந்தது, ஒரு சில படங்களில் சரியான கேரக்ட்டர் வடிவமைப்பு இல்லாமல் ரசிகர்கள் கோபமடைந்தனர். பல படங்களில் முக்கியமான கேரக்டர்களின் தோற்றம் மற்றும் குணம் அடிக்கடி மாற்றப்பட்டது. ஒரு உதாரணம் சொல்லவேண்டும் என்றால் பேட்மேன் வேர்ஸஸ் சூப்பர்மேன் படத்தில் டேரரான் ஷார்ப்பான கோபக்கார பேட்மேன் கதாப்பத்திரம் இருப்பார் ஆனால் ஜேஸ்டிஸ் லீக் படத்திலும் பிளாஷ் படத்திலும் அவரை டம்மி காமெடி பீஸாக மாற்றி விடுவதால் இப்படி செய்யும் போது படத்தின் அடிப்படையில் மொக்கை இருப்பதால் ரசிகர்களின் நல்ல படம் வரும் என்ற நம்பிக்கையிலும் மண் அள்ளி போடப்பட்டு பாதிப்பு ஏற்பட்டது. மேலும் டி.சி. யூனிவர்ஸ் படங்கள் உடனடியாக பிளாஸ்டிக் மேன் படம் வரும் , க்ரீன் லேன்ட்டரன் படம் வரும் என்று விளம்பரத்துக்கு பல எதிர்கால திட்டங்களை வெளியிட்டது. ஆனால் சம்மந்தமே இல்லாத புதிய படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனம் குறைந்துவிட்டது. மேலும் சூஸைட் ஸ்க்வாட் போன்ற படங்களில் மிகுதியாக திரைக்கதை இருந்தது. இருந்தாலும் படம் வெற்றி பெறவில்லை. இந்த காரணங்கள் டி.சி. யூனிவர்ஸ் படங்கள் திடீரென தோல்வியடைவதற்கு வழிவகுத்தன.உங்களுக்கு எந்த டி.சி. படம் பிடித்திருக்கிறது? நீங்கள் எதிர்பார்க்கும் டி.சி. படம் எது? உங்கள் எண்ணங்களை வலைப்பூவுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்!

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...