பொதுவாக நிறைய விஷயங்கள் இருக்கும்போது அறிவியலை மனிதன் ஏன் நம்ப வேண்டும் ? அறிவியல் எப்போதுமே மாறாதது. இங்கே அறிவியல் அடிப்படையில் ஒரு விஷயத்தை பார்க்க வேண்டும் என்றால் உயிருள்ள மற்றும் உயிர் இல்லாத விஷயங்கள் என்றேதான் பார்க்க முடியும். முட்டாள்கள் தங்களுடைய கூட்டங்களை திருப்திப்படுத்த மூட நம்பிக்கைகளை விதைத்து சந்தோஷமாக இருப்பார்கள். இதுக்காக இவர்களுடைய வாழ்க்கையை வளர்த்துவிட்டால் ஒரு காலத்தில் மொத்த உலகத்தையே அவர்களுடைய முட்டாள்தனம்தான் வழிநடத்துகிறது என்று கணக்கு போடுவார்கள். இந்த முட்டாள்தனத்தை அறிவியல் மற்றும் தொழில் நுட்பததால் மட்டும்தான் வெளியே எடுக்க முடியும்.
மேலும் அறிவியல் என்பது எப்போதுமே மனிதனுக்கு தூய்மையான நன்மையை மட்டும் தான் கொடுக்கிறது அல்லது கொடுக்க முயற்சிக்கிறது. ஒரு இடத்தில் அறிவியல் பயன்படுத்தப்பட்டால் அங்கே நன்மைதான் விளைகிறது/ ஒரு குழந்தைக்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறது என்றால் ஹாஸ்பிடல்லில் அட்மிட் பண்ணி அந்த குழந்தைக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் செய்து அந்த குழந்தையுடைய உடல்நிலை மற்றும் வசதி வாய்ப்பை புரிந்து கொண்டு நல்ல மனதோடு மருத்துவத்திற்கு தேவையான அனைத்து ஏற்படுகளையும் செய்வது அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உலகம்தான்.
ஆனால் பிற்போக்கு வாதிகளின் உலகத்தில் இவர்களின் கருத்துக்கள் எல்லாம் என்ன சொல்கிறது என்றால் அந்த குழந்தை எந்த குடும்பத்திற்கு பிறந்தது ? என்ன ரத்தம் ? என்ன சாதி ? கடன் இருக்கிறதா ? அந்த குழந்தைக்கு பிறந்தவர்கள் என்ன வேலை பார்க்கிறார்கள் ? இந்த குழந்தையுடைய குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்ன வேலை பார்க்கிறார்கள் அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் நமக்கு மேலானவர்கள் வம்சமா ? அல்லது நமக்கு கீழானவர்களா ? எந்த மதத்தை சேர்ந்தவர்கள் ? எந்த உட்பிரிவு சாதியை சேர்ந்தவர்கள் ? எந்த இனத்தை சேர்ந்தவர்கள் ? எந்த கோவிலை சேர்ந்தவர்கள் என்று பயனற்ற கேள்விகளை தான் மற்ற விஷயங்கள் கேட்டுக்
இந்த உலகத்தில் எல்லோருக்குமே கர்மா என்று ஒரு விஷயம் இருப்பதாக நம்பப்படுகிறது. தெய்வம் நின்று கொல்லும் என்றால் கர்மா காலத்தின் எந்த புள்ளியிலும் நன்மை தீமைகளை அளந்து கொடுத்துவிடும். இங்கே ஒருவர் நல்ல விஷயத்தை செய்தால் அவர் நடக்கும் விஷயம் அனைத்தும் நல்லதாக இருக்கிறது. இதுவே அவர் கெட்ட விஷயத்தை செய்தால் அவருக்கு நடக்கும் விஷயம் கெட்டதாக இருக்கிறது
இங்கே புண்ணியம் பாவம் என்று கதையெல்லாம் ரீல் ரீலாக மக்களை மூளை சலவை செய்ய பயன்படுத்துகிறார்கள். இங்கே இந்த மாதிரியான கட்டுக்கதைகள் மட்டுமே வைத்துக்கொண்டு அறிவியலை தோற்கடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்கள். சோகமான விஷயம் என்னவென்றால் பெற்றோரில் போதுமான படிப்பறிவு இல்லாதவர்கள் குழந்தைகளின் படிப்பை தூக்கி எறிந்து விட்டு இது போன்ற கட்டுக்கதைகளை மட்டுமே சோறு ஊட்டுவது போல ஊட்டி குடும்ப பெரியவர்கள் நன்மை மட்டும்தான் செய்ய பிறந்த புனித பிறவிகள் என்று நம்பி வாழ்க்கையில் முட்டாள்தனத்தின் இரயிலை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் வேண்டுமென்றால் நல்ல வகையில் சந்தோஷமாக வாழலாம் ஆனால் இவர்களுடைய சன்னதிகள் கண்டிப்பாக இந்த மூடத்தனத்தால் பாதிக்கப்பட்டுக்கொண்டு வாழ்வார்கள் மேலும் சமுதாயத்தில் கண்டிப்பாக அடிபடுவார்கள். பிற்போக்கு நிறைந்தவர்கள் வெளியூரில் வெளிநாட்டில் அடுத்த சமுதாயத்தை வளர்ப்பது நல்லது.
No comments:
Post a Comment