Wednesday, November 20, 2024

MUSIC TALKS - SENTHAAZHAM POOVIL VANDHAADUM THENDRAL EN MEEDHU MODHUTHAMMA - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




செந்தாழம் பூவில் 
வந்தாடும் தென்றல் 
என் மீது மோதுதம்மா
பூ வாசம் மேடை போடுதம்மா 
பெண் போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம் 
அம்மம்மா ஆனந்தம்

வளைந்து நெளிந்து 
போகும்பாதை 
மங்கை மோக கூந்தலோ 
மயங்கி மயங்கி 
செல்லும் வெள்ளம் 
பருவ நாண ஊடலோ

ஆலங்கொடி மேலே கிளி 
தேன் கனிகளை தேடுது
ஆசை குயில் பாஷையின்றி
ராகம் என்ன பாடுது 
காடுகள் மலைகள் 
தேவன் கலைகள்

அழகு மிகுந்த ராஜகுமாரி 
மேகமாக போகிறாள் 
ஜரிகை நெளியும் சேலை கொண்டு
மலையை மூட பார்க்கிறாள்

பள்ளம் சிலா் உள்ளம் 
என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன்
எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி
இறைவன் ஆட்சி

இளைய பருவம்
மலையில் வந்தால் 
ஏகம் சொர்க்க சிந்தனை 
இதழை வருடும் 
பனியின் காற்று
கம்பன் செய்த வர்ணனை

ஓடை தரும்
வாடை காற்று 
வான் உலகை காட்டுது 
உள்ளே வரும் 
வெள்ளம் ஒன்று
எங்கோ என்னை 
கூட்டுது மறவேன் மறவேன்
அற்புத காட்சி


No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...