Tuesday, November 12, 2024

MUSIC TALKS - MALAI KOVIL VAASALIL KAARTHIGAI DEEPAM MINNUTHEY ! VILAKETHUM VELAIYIL ANANDHA RAAGAM SOLLUTHEY ! - TAMIL SONG LYRICS !

 


மலை கோவில் வாசலில் 
கார்த்திகை தீபம் மின்னுதே 
விளக்கேற்றும் வேளையில்
ஆனந்த கானம் சொல்லுதே

முத்து முத்து சுடரே சுடரே 
கொடு வேண்டிடும் வரங்களையே
வண்ண வண்ண கதிரே கதிரே
தொடு ஆயிரம் சுகங்களையே

மலை கோவில் வாசலில் 
கார்த்திகை தீபம் மின்னுதே 
விளக்கேற்றும் வேளையில்
ஆனந்த கானம் சொல்லுதே

நாடகம் ஆடிய பாடகன் 
நீ இன்று நான் தொடும் காதலன்
நீ சொல்ல நான் மெல்ல  மாறினேன்
நன்றியை வாய் விட்டு கூறினேன்

தேர் அழகும் சின்ன பேர் அழகும்
உன்னை சேராதா உடன் வாராதா
மான் அழகும் கெண்டை மீன் அழகும்
கண்கள் காட்டாதா இசை கூட்டாதா
பாலாடை இவன் மேல் ஆட 
வண்ண நூலாடை இனி நீயாகும்

நான் ஒரு பூச்சரம் ஆகவோ
நீள் குழல் மீதினில் ஆடவோ
நான் ஒரு மெல்லிசை ஆகவோ
நாளும் உன் நாவினில் ஆடவோ

நான் படிக்கும்
தமிழ் கீர்த்தனங்கள்
இங்கு நாள் தோறும்
உந்தன் சீர் பாடும்

பூ மரத்தில்
பசும் பொன் நிறத்தில்
வளை பூத்தாடும் 
உந்தன் பேர் பாடும்

மா கோலம் 
மழை நீர் கோலம்
வண்ண நாள் காணும் 
இந்த ஊர்கோலம்



No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...