இந்த படம் சமீபத்தில் பார்த்த படங்களில் மிகவும் முக்கியமான படமாக இருக்கிறது. இந்த திரைப்படம் நடிகர் நிக்கோலஸ் கேஜின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள். அவருக்கு நல்ல படங்கள் கிடைக்காமல் இருப்பதை அவரே கிண்டல் செய்யும் ஒரு காமெடியில் இருந்து தொடங்குகிறது. நம்முடைய ஒரிஜினல் வெர்ஷன் என்பது என்ன ? எல்லோருமே ஜெயிக்க வேண்டிய துறையில் நமக்கு கெரியர் போய்விட்டதே என்று கவலைப்படும் நிக்கோலஸ் கேஜின் புகழின் உச்சத்தில் இருந்து கீழே போய்விட்டதால் குடும்பமும் அவரை மதிக்கவில்லை என்பதால் மனதுக்கு வருத்தத்தை மட்டும்தான் கொடுத்து இருக்கிறது. இதனால் மன நிம்மதியை தேடி அவருடைய வெளிநாட்டு ரசிகரின் வீட்டுக்கு அழைப்பை ஏற்று விருந்தளியாக செல்கிறார். இங்கே எல்லாமே நன்றாக செல்லும்போது தன்னை அழைத்த அந்த நபர் ஒரு இன்டர்நேஷனல் குற்றவாளி என்று ஒரு இடியை இறக்கும் ரிஸ்க்கை நிக்கோலஸ் கேஜ் சமாளித்து எப்படி அந்த இடத்தில் பணய கைதியாக இருக்கும் அரசியல் தலைவரின் மகளையும் காப்பாற்றி கொண்டுவருகிறார் என்று வேற லெவல்லில் திரைக்கதையில் வேலை பார்த்து இருக்கிறார்கள் ! வோர்த்தான நடிப்பு கொடுத்து அவரது ரசிகர் ஜாவியாக நடித்திருக்கும் பெட்ரோ பாஸ்கல் கலக்கியுள்ளார் ! நட்பில் காணப்படும் விசுவாசம் மற்றும் ஆதரவு முக்கியம்தான். போராடுவதில் உண்மையான உறவுகளின் மதிப்பைக் காட்டுகிறது. மேலும் இந்த படத்தில் ஒரு அருமையான விஷுவல் ஸ்டைல் இருக்கிறது. இந்தப் படத்தோட பிளஸ் பாயிண்ட் அதுதான். இந்த படத்துடைய பெயரை பாருங்கள் மிகப்பெரிய திறமைகள் இருப்பதால் அதனால் தாங்க முடியாத பாரம் என்றுதான் இந்த படத்துக்கு பெயரை வைத்துள்ளார்கள்.
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கதைகள் பேசலாம் வாங்க - 10
ஆங்கில பாடகர் அகான் 2000-களின் நடுப்பகுதியில் ரிங்டோன் விற்பனையில் மிகவும் வெற்றி கண்டார் இந்த விற்பனையில் ஒரு சின்ன நுணுக்கத்தை கவனித்தத...
-
இங்கே நிறைய பேருடைய மோசமான வாழ்க்கைக்கு அவர்களுடைய இயலாமை மட்டும் தான் காரணம். உடலும் மனதும் அவர்களுக்கெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது ஆனால்...
-
ஒரு கிராமத்தில் குடிநீருக்காக ஒரே ஒரு கிணறு இருந்தது. ஒரு நாள் நாய் ஒன்று கிணற்றில் விழுந்து இறந்தது. தண்ணீர் அசுத்தமாகவும், குடிக்க முடியாத...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக