உங்களுக்கு மாற்று கருத்துக்கள் இருக்கலாம் ஆனால் என்னுடைய கருத்து என்னவென்றால் ஒரு நடிகர் அரசியலுக்கு வருகிறார் என்றால் அவருடைய பண பலத்தையும் கௌரவத்தையும் அதிகப்படுத்தி கொள்வதற்காக தானே தவிர மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு குறைவாகத்தான் இருக்கிறது !
இன்றைக்கு தமிழ் வெற்றி கழகம் ஒரு பக்கம் இருந்தாலும் இந்த கட்சியால் பெரிய மாற்றத்தை உருவாக்க முடியுமா என்பதுக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
டிக்கெட் எடுக்காமல் ரயிலில் பயணம் பண்ணும் நமது சகோதரர்கள் நேரடியாக சொல்லவில்லை என்றாலும் உன்னை விட நான் மேலானவன் என்ற ஒரு நினைப்போடு அவர்களுடைய உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக இந்த பிரிவிலேஜே கருதுகின்றனர். நான் யாரை சொல்கிறேன் என்று உங்களுக்கு தெரியும்.
ஒரு முதலாளிக்கு கீழே ஒரு வேலைக்கார கூட்டம் வேலை பார்த்து அடிமையாக இருக்க வேண்டும் என்பது பொருளாதாரம் தொடங்கிய காலத்தில் இருந்தே உருவான அடிப்படை விதி ஆகும். ஆட்சிகளில் மாற்றம் நமக்கு இந்த விதியை எப்படி மாற்றப்போகிறது ? உங்களுடைய வாழ்க்கைக்கு நீங்கள்தான் பொறுப்பு
சமூக சமத்துவ கோட்பாட்டை உருவாக்கிவிடலாம் ஆனால் பணம் இருப்பவர்களையும் பணம் இல்லாதவர்களையும் சமமாக மதிக்கும் விஷயத்தை கண்டிப்பாக எப்படிப்பட்ட ஆட்சியாலும் கொடுக்க முடியாது.
சொலல் வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யாருக்கும் அரிது என்பது போல சொற்களை பேசுவதில் வல்லவர்களாக இருப்பார்கள் மேலும் சோர்வு இல்லாமல் வேலை செய்பவர்களாக இருப்பார்கள் போதுமான பணபலமும் அவர்களிடம் இருப்பதால் யாருக்கும் அஞ்சாதவர்களாகவும் கூட இருப்பார்கள்.
அரசியலில் நுணுக்கம் என்பது மிகவும் நுட்பமானது நம்மை ஆதரிக்கும் மக்களும் இருப்பார்கள் கஷ்டத்தை கொடுக்கும் மக்களும் இருப்பார்கள் ஆனால் இவர்கள் இருவரோடு கூடிய கஷ்டங்களையும் நாம் தெரிந்து கொண்டு இவர்கள் இந்த இரண்டு தரப்பினர்களுக்கும் நம் நன்மையைத்தான் செய்ய வேண்டும் என்ற கோட்பாடு கட்டாயம் ஆன மிக முக்கியமான ஒரு விஷயம்.
நமக்கு ஆதரவாக கூடியவர்கள் நமக்காக நன்மை செய்வார்கள் என்றால் அவர்களுக்கு மட்டும் நன்மை செய்து ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்வதும் அரசியலுக்கு தகுந்தது அல்ல.
No comments:
Post a Comment