உள்ளம் கேட்குமே - இந்த படம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். சந்தோஷமான ஒரு காலகட்டத்தினை நாம் வாழ்ந்து இருக்கிறோம் என்றால் பொதுவாக கல்லூரியில் வாழக்கூடிய நாட்கள் மட்டும்தான் நன்றாக சொல்ல முடியும். யாராக இருந்தாலும் கல்லூரியில் நண்பர்களோடு சேர்ந்து உருவாக்கக்கூடிய நினைவுகள் அனைத்துமே அழியாதது. இது போன்ற கல்லூரியில் நடந்த ஒரு கேஸ்வலான காதல் கதை ஒரு பக்கம் சென்றாலும் காலத்தின் கட்டாயத்தால் பிரிந்த தோழமைகள் எப்படி பல வருடங்களுக்கு பின்னால் மறுபடியும் சந்திக்கும்போது காதல் மறுபடியும் பூக்கிறது என்று இந்த படத்தில் நன்றாகவே சொல்கின்றது.
உண்மையான காதல் நிறைய வருடங்களே ஆனாலும் சேர்ந்துவிடும் என்பதுதான் இந்த படத்தின் கதையாக இருக்கிறது. மற்றபடி சராசரியான கல்லூரி மாணவர்களாக இருக்க கூடிய இரண்டு நண்பர்கள் கல்லூரியில் அனைத்து சந்தோஷங்களையும் அனைத்து துன்பங்களையும் கலர் கலர் கனவுகளும் அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள் இவர்களுடைய இருவருடைய வாழ்க்கையிலும் ஒரு முறை காதல் தனித்தனியாக வரும்போது கவலையற்ற இளைஞர்களுடைய வாழ்க்கையில் ஒருவருடைய காதல் எப்படி அவருடைய வாழ்க்கையில் மிகவும் தாக்கத்தை உருவாக்குகிறது என்பதை இந்த படத்தில் நன்றாக நேர்த்தியாக சொல்லியுள்ளார்கள் பாசிட்டிவான எண்டிங் கொடுத்திருப்பதை இந்த கதைக்கு மிகவும் மிஸ் பண்ணிட்டாக அமைந்துள்ளது கிளைமாக்ஸில் காதல் வெற்றி அடைகிறது ! இதை விட வேறு என்ன வேண்டும் !
No comments:
Post a Comment