ஒரு பொய்யாவது
சொல் கண்ணே
உன் காதல்
நான் தான் என்று
அந்த சொல்லில்
உயிர் வாழ்வேன்
பூக்களில் உன்னால் சத்தம்
அடி மௌனத்தில்
உன்னால் யுத்தம்
இதைத் தாங்குமா
என் நெஞ்சம் ?
பெண்மையும்
மென்மையும்
பக்கம் பக்கம்தான்
ரொம்பப
பக்கம் பக்கம்தான்
பார்த்தால் ரெண்டும்
வேறுதான்
பாலுக்கும்
கள்ளுக்கும்
வண்ணம்
ஒன்றுதான்
பார்க்கும் கண்கள்
ஒன்றுதான்
உண்டால்
ரெண்டும் வேறுதான்
இரவினைத் திரட்டி
கண்மணியின் குழல்
செய்தாரோ ?
நிலவின் ஒளி திரட்டி
கண்கள் செய்தாரோ ?
விண்மீன் விண்மீன்
கொண்டு
விரலில் நகம் சமைத்து
மின்னலின் கீற்றுகள்
கொண்டு
கைரேகை செய்தானோ ?
வாடைக் காற்று பட்டு
வயதுக்கு வந்த பூக்கள்
கொண்டு தங்கம் தங்கம்
பூசித் தோள் செய்தானோ ?
ஆனால் பெண்ணே
உள்ளம் கல்லில்
செய்து வைத்தானோ !
காதல் கண்ணே
உள்ளம் கல்லில்
செய்து வைத்தானோ !
நிலவினை எனக்கு
அருகில் காட்டியது நீதானே
மலரின் முகவரிகள்
சொன்னதும் நீதானே !
காற்று பூமி வானம்
காதல் பேசும் மேகம்
அறிமுகம் செய்தது யார் ? யார் ?
என் அன்பே நீதானே
கங்கை கங்கை
ஆற்றை
கவிதைகள் கொண்டு தரும்
காவிரி ஊற்றை
கண்ணில்
கையில் தந்தவன் நீதானே
ஆனால் பெண்ணே
நெஞ்சை மட்டும்
மூடி வைத்தாயே
காதல் கண்ணே
நெஞ்சை மட்டும்
மூடி வைத்தாயே !
3 கருத்துகள்:
ஆமை ஓடு வெளிய தெரியுது. தலைவன் சறுக்குனா மேல ஏறி ஆடறானுங்க..
ஏழையா இருக்கறவன்தான் சந்தோஷமான வாழ்க்கை வாழறான்னு தமிழ் சினிமா உருட்ட இன்னுமே நம்பி நடிகனுக்கு ஆதரவு தரவன் ஏமாந்த சோணங்கிதான்.
neenga avarukku muttu kodukkatheenga sir. ithu valindhu kodukkara muttaa enakkku paduthu.
கருத்துரையிடுக