மாரீசன் ஒரு தரமான தமிழ் க்ரைம் திரில்லர் திரைப்படம். இதில் பகாத் பாசில் "தயாளன்" அல்லது "தயா" என்ற சிறிய அளவிலான திருடன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பலையங்கோட்டை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தயா, புதிய வாழ்க்கையை தொடங்க முயல்கிறார். ஆனால், அவர் வாழும் சமூகத்தில் தொடர் கொலைகள் நடக்க ஆரம்பிக்க, அவன் மீதான சந்தேகம் அதிகரிக்கிறது. இந்த மர்மமான சூழ்நிலையில், தயா பல ரகசியங்கள், துரோகங்கள் மற்றும் மறைக்கப்பட்ட உண்மைகளை எதிர்கொள்கிறார்.
இந்த விஷயங்களுக்கு சம்மந்தமே இல்லாமல் வடிவேலு ஒரு மன நலம் பாதிப்பு உள்ள மறதி வியாதி இருக்கும் நபராக நடக்கும் பிரச்சனைகளில் சிக்கிக்கொள்வதாக இருக்கும் இந்த படத்தில் ஃபஹத் பாசில் நடிப்பு திறனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்து, கதைக்கு தீவிரத்தையும் ஆழத்தையும் சேர்க்கிறார்.
சுதீஷ் சங்கர் இயக்கிய இந்தப் படத்தை வி. கிருஷ்ண மூர்த்தி எழுதியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த 152 நிமிட திரைப்படம், பெண் சமூகத்துக்கு எதிராக நடக்கும் குற்றம் மீட்பு, அடையாளம் மற்றும் சமூக நீதியை மையமாகக் கொண்டு ஒரு தெளிவான கதையாக நகர்கிறது. விமர்சகர்கள் நடிப்பையும், கதையின் கட்டமைப்பையும் பாராட்டினாலும், ₹15 கோடி பட்ஜெட்டில் ₹6.53 கோடி மட்டுமே வசூலித்ததால், வணிக ரீதியில் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக