வெள்ளி, 24 அக்டோபர், 2025

GENERAL TALKS - நல்ல மக்கள் நல்ல வாழ்க்கை பெறுவார்களா ?



நல்ல மனதோடு இருக்க வேண்டும் என்று நினைக்கும் மனிதர்கள் - இவர்கள் செய்யும் பெரிய மிஸ்டேக் இதுதான் ! இவர்கள் மற்றவர்களின் பிரச்சினைகளை சரிசெய்ய விரும்புகிறார்கள். இந்த சமூகத்தின் பிரச்சினைகளை சரிசெய்ய விரும்புகிறார்கள். ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய ஒரு விஷயம், தங்கள் சொந்த பிரச்சினைகளைப் பற்றி அதிகம் சிந்திக்க வேண்டும். 

அவர்கள் நல்லவர்களாக இருந்தால் இது குறிப்பாக உண்மை. நல்லவர்கள் எப்போதும் தங்கள் சொந்த பிரச்சினைகளையும் மற்றவர்களின் பிரச்சினைகளையும் கருத்தில் கொண்டு, அந்தப் பிரச்சினைகளுக்கு நாம் தீர்வு காண முடியுமா என்று சிந்திக்கிறார்கள் ?

இந்த வகையான மனநிலை அந்த நேரத்தில் இவர்களுடைய நல்ல மனதால் அமைக்கப்படலாம். ஆனால் பயணம் இருப்பவர்கள் எப்போது வேண்டுமென்றாலும் யார் வேண்டுமானாலும் எந்த நேரத்திலும்  மற்றவர்களுக்கு உதவலாம். இந்த நல்லவர்கள் உதவிகளின் நாயகனாக இருக்க வேண்டும் என்று நினைத்து பணமே இல்லாத நேரத்தில் கூட உதவி பண்ணவேண்டும் என்று இன்னுமே அதிகமாக நல்லவர்கள் இழப்பார்கள், இவர்களுக்கு இந்த விஷயம் தவறு என்று சொல்லும் நண்பர்கள் இருக்க வேண்டும், நண்பர்கள் கூட இல்லை என்றால் இந்த நல்ல மனதோடு வாழவேண்டும் என்ற கொள்கை இவர்களை அகல பாதாளத்தில் தள்ளிவிடும் !

நிச்சயமாக இந்த உலகத்தில் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இதுபோன்ற விஷயங்களில் ஏமாற்றத்தையும் பின்னடைவையும் சந்திப்பார்கள். இதே போல நிலைமைகள் எப்போதுமே இருந்தால் அவர்களால் எதிர்காலத்தில் முன்னேற முடியாது. நீங்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும், இதுபோன்ற விஷயங்களைக் கண்காணிக்க வேண்டும்.

இவர்கள் எல்லோருமே தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களில் முக்கியமான விஷயம் உங்கள் சொந்த பிரச்சினைகளை 100% தீர்த்த பிறகு, நீங்கள் அடுத்த கட்டத்திற்குச் சென்று மற்றவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய வேலையைக் கவனிக்கலாம் !

கருத்துகள் இல்லை:

GENERAL TALKS - 001

நம்பிக்கை என்பது வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு கருத்து. நம்பிக்கை இல்லையென்றால், நம்மைச் சுற்றியுள்ள மக்கள் மீதோ, நாம் எடுக்கக்கூடிய செயல்...