வெள்ளி, 24 அக்டோபர், 2025

GENERAL TALKS - எப்போதுமே கனவுகள் கலைய அனுமதிக்க கூடாது !

 


கனவுகள் இல்லாத மனிதர்கள் என்று இந்த யாரையும் சொல்ல முடியாது. நம்முடைய வாழ்க்கையில் எல்லோருக்கும் மிகவும் அதிகமான அளவுக்கு கனவுகள் ஒரு காலத்தில் இருந்திருக்கும். ஆனால் வளர வளர நாம் இந்த உலகத்தின் ரியாலிட்டியை புரிந்து இருப்போம். இந்த ரியாலிட்டி என்ன சொல்கிறது என்றால் நம்முடைய கனவுகளை நிறைவேற்றுவது என்பது கடைசி வரையில்.நடக்காத காரியம் என்றும் வாழ்க்கையின் செயல்பாடுகளை புரிந்துகொண்டு அதன் அடிப்படையில் வாழ்ந்து விடலாம் என்றும் நமக்கு நம்பிக்கையை கொடுத்துவிடும்

நமது கனவுகள் நிறைவேறாமல் போனதுக்கு ரியாலிட்டி தடுத்துவிட்டது என்பது ஏற்புடைய காரணம் அல்ல. உண்மையான காரணம் என்னவென்றால் நம்முடைய கனவுகள் தனியாக இருக்கும் பொழுது நிறைவேற்றப்படக்கூடிய விஷயங்களாக இருக்காது. நம்முடைய கனவுகள் என்பது நமக்காக வேலை பார்க்கும் வேலைக்காரர்களின் கடின உழைப்பும் பல வெற்றிகளும் செல்வம் இருந்தால் மட்டுமே பயனுள்ளதாக இருக்கும். அது அதிக உழைப்பு இருப்பது போன்ற ஒரு விஷயம்.

நம் வாழ்வில் நம்மை சிந்திக்க வைக்கும் பல கருத்துக்கள் உள்ளன. ஆனால் குருட்டுத்தனமாக விரிவாக சிந்திக்காமல் அந்தக் கருத்துக்களை ஒருபோதும் செயலாக மாற்றக்கூடாது என்ற நிலையை உருவாக்கி அவை இறுதிவரை கருத்துக்களாகவே இருக்கப் போகிறதென்றால், அந்தக் கருத்துக்களை நம் வாழ்க்கையின் சித்தாந்தமாக ஏற்றுக்கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை.

அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை, நம் முன்னோர்கள் தலைமுறை தலைமுறையாக விதைத்த விதைகளிலிருந்து நாம் வெளிப்பட்டிருக்கிறோம், ஏனென்றால் நம்மை எதிர்கொள்ளும் ஆபத்துகளை கூட்டமாக இருப்பதன் மூலமாகத்தான் நாம் நேருக்கு நேர் எதிர்கொண்டு அவற்றைக் கடந்து வந்திருக்கிறோம், தனிமையில் அல்ல, குழுக்களாக இருப்பதே நமக்கு பலம். உதாரணத்துக்கு  நம் முன்னோர்கள் தனி மனிதனாக வாழ நினைத்திருந்தால், அவர்கள் பாவப்பட்ட வாழ்க்கை காடுகளின் ஆபத்துகளில் சிக்கி அழிந்து போயிருக்கும். 

அவர்கள் வானத்தைப் பார்த்து, தனிநபர்களாக தங்கள் கனவுகள் நிறைவேற பிரார்த்தனை செய்கிறார்கள், தங்கள் ஆசைகளைப் பற்றிக் கொள்கிறார்கள். ஆசைப்படுவது தவறல்ல. நமக்காக வேலை பார்க்கும் ஒரு இடத்தை உருவாக்குவது தான் நமக்காக வேலை பார்க்கும் மக்களை நம்மோடு சேர்த்துக் கொள்வதுதான் கனவுகளை நிறைவேற்ற சரியான வழி இருக்கக்கூடிய ஒரே ஒரு வழியும் அதுதான். இந்த விஷயங்களை மக்கள் புரிந்துகொண்டு வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டும் என்று இந்த வலைப்பூ சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

GENERAL TALKS - 001

நம்பிக்கை என்பது வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு கருத்து. நம்பிக்கை இல்லையென்றால், நம்மைச் சுற்றியுள்ள மக்கள் மீதோ, நாம் எடுக்கக்கூடிய செயல்...