இந்த படத்தை பெற்ற சொல்ல வேண்டுமென்றால் மிக மிக பொறுமையாக பார்க்க வேண்டிய ஒரு இன்ட்ரஸ்டிங்கான திரைப்படம் . காதநாயகருடைய நண்பர்கள் மர்மமான முறையில் விசித்திரமான சம்பவங்கள் மற்றும் விபத்துகளில் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்த விஷயத்தை விசாரிக்கும் நம் நாயகன், இந்த சம்பவங்களுக்குப் பின்னால் ஒரு ஆன்மா தனது பழிவாங்கும் செயலில் வேலைபார்த்துக்கொண்டு இருப்பதைக் கண்டுபிடிக்கிறார். இந்த விஷயம் மிகவும் சாதாரணமான விஷயம் என்பதால், இறுதியாக அந்த ஆன்மாவின் தாக்குதலில் தப்பிப்பாரா என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
இந்தப் படத்தில் கதையில் பல திருப்பங்களும், சுவாரஸ்யமான பகுதிகளும் உள்ளன. நம் தமிழ் சினிமா இந்த மாதிரியான ஒரு திகில் படத்தை இதற்கு முன்பு பார்த்ததில்லை. பார்ப்பது அரிது.
அருந்ததி படத்தை போல நிறைவேறாத ஆசைகள் வைத்துக்கொண்டு டிக்கெட் வாங்கிய ஆன்மா என்று இந்த படத்தில் கலாய்க்க கூடிய அளவுக்கு திரைக்கதையை நகர்த்தாமல் ஒரு டீசன்ட்டான பயமுறுத்தக்கூடிய விஷயத்தை ஹீரோ எப்படி தைரியமாக ஜெயித்து காட்டுகிறார் என்பதை மிகத் தெளிவானதாக விரிவானதாக ஒரு கதையாக இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார்கள். உங்களுக்கு தமிழ் சினிமாவில் உலகத்தரமான ஒரு படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம் இந்த அந்தகாரம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக