வேலையில்லா பட்டதாரி படத்தில், நடிகர் தனுஷின் கதாபாத்திரமான ரகுவரன், தனது சிவில் இன்ஜினியரிங் படிப்பை முடித்த பிறகு, தனக்குப் பிடித்த வேலையை மட்டுமே செய்ய முடியும் என்றும், தனக்குப் பிடிக்காத வேலை கிடைத்தால், அதை ஏற்க மாட்டேன் என்றும், சம்பளத்திற்காக மட்டுமே வேலை செய்வேன் என்றும் பிடிவாதமாக இருக்கிறார். உங்களுக்கு பிடித்த வேலைகளை மட்டும் தான் நீங்கள் செய்ய போகிறீர்கள். உங்களுக்கு பிடிக்காத வேலைகள் உங்களிடம் கொடுக்கப்பட்டால் அந்த வேலைகளை உதாசீனப்படுத்தி விட்டு விட்டு உங்களுடைய பிடித்த வேலைகளுக்கு மட்டும் தான் கிடைக்கும் வரையில் காத்திருக்கப் போகிறீர்கள் என்றால் உங்களுடைய வெற்றியை நீங்கள் தான் மிக அதிகமான காலதாமதத்தில் கொண்டு செலுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். ஒரு திறமையான நடிகர் ஒரு நடுத்தர குடும்பத்தை சார்ந்த வேலையில்லா பட்டதாரியின் தனிப்பட்ட மனநிலையை பிரதிபலிக்கக் கூடிய விஷயமாக இந்த படம் நீங்கள் எடுத்துக் கொள்ளலாமே தவிர்த்து இந்த படத்தில் இருப்பது போல வாழ்க்கையிலிருந்துவிடலாம் என்று நினைக்க வேண்டாம். வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்றால் பிடிக்காத விஷயங்களை நிறையவே செய்ய வேண்டும். உங்களுக்கு பிடித்த விஷயங்களை மட்டும் தான் செய்து கொண்டிருக்கப் போகிறீர்கள் என்றால் உங்களுடைய முன்னேற்றம்.கடைசியில் மிக குறைவானதாக இருக்கும். அதுவே பிடிக்காத விஷயங்களை செய்தவர்கள் உங்களுடைய கண்களுக்கு முன்னாலேயே அதிகமாக முன்னேறியிருப்பார்கள்.அவர்களுடைய வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து கூட இருக்கலாம்.உங்களுக்கு பிடித்த விஷயங்களை மட்டும் தான் செய்யப்போகிறீர்கள் என்ற கனமான ஒரு முடிவை விட்டு விடுங்கள். இந்த வகையில் உங்களுடைய கௌரவத்தை விட்டுக் கொடுத்துவிட்டு உங்களுடைய திறன்களையும் உங்களுடைய பலத்தையும் அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றால் உங்களுக்கு பிடிக்காத விஷயங்களை செய்வதற்கு நீங்கள் எப்பொழுதுமே தயாராக இருங்கள். உங்களுக்கு பிடிக்காத விஷயங்கள் உங்களுக்கு கொடுக்கப்பட்டால் கூட.தாராளமாக செய்து வெற்றியடைந்து காட்டுங்கள்.
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
GENERAL TALKS - 001
நம்பிக்கை என்பது வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு கருத்து. நம்பிக்கை இல்லையென்றால், நம்மைச் சுற்றியுள்ள மக்கள் மீதோ, நாம் எடுக்கக்கூடிய செயல்...
-
நீங்கள் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் இந்த படம் என்று சொல்லலாம், செம்ம எண்டர்டெயின்மெண்ட், இந்த படத்துடைய கதையை பார்க்க...
-
இங்கே நிறைய பேருடைய மோசமான வாழ்க்கைக்கு அவர்களுடைய இயலாமை மட்டும் தான் காரணம். உடலும் மனதும் அவர்களுக்கெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது ஆனால்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக