2024ஆம் ஆண்டு வெளியான ஒரு ஃபேண்டஸி லெவல் காதல் நகைச்சுவை திரைப்படம். இந்தக் கதை பிரிட்டனில் உள்ள ஒரு பள்ளியை மையமாகக் கொண்டு நகர்கிறது.
ஆர்ச்சி ஆர்னால்ட் என்ற பணக்கார தனிமையில் சிக்கி தவிக்கும் பையனின் ஒரே தோழியாக இருக்கும் அமிலியாவின் மேலே இருக்கும் காதல் பயணத்தைச் சுற்றி நகர்கிறது.
ஆர்ச்சி, தனது சிறுவயதிலிருந்தே நெருங்கிய தோழியான அமீலியாவை மனதளவில் காதலிக்கிறார். ஆனால், தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தும் தருணத்தில் பள்ளிக்கூடத்தின் சூப்பர் ஸ்டார் போல மாறுகிறான் அமெரிக்காவிலிருந்து வந்த புதிய மாணவன் பில்லி வால்ஷ்,
இந்த பில்லி வால்ஸ் இதுவரையில் தனிமையில் இருந்த அமீலியாவின் கவனத்தை ஈர்க்கிறார். தன்னை தனது தோழி காதலிக்காமல் போனதால் மனமுடைந்த ஆர்ச்சி ஒரு போலியான ஆன்லைன் காதல் ஆலோசகராக நடித்து, பில்லி மற்றும் அமீலியாவை பிரிக்க முயல்கிறார் ஆனால் அதுவும் தோல்வியடைந்து அவன் திட்டம் எதிர்பாராத விதமாக செயல்பட்டு, அந்த இருவரையும் மேலும் நெருக்கமாக்குகிறது.
அமரிக்க பள்ளி சூழ்நிலைகளின் குழப்பங்கள், காதல், பொய்கள் மற்றும் உண்மைகள் ஆகியவற்றை இந்த திரைப்படம் நகைச்சுவையுடனும், உணர்வுகளுடனும் சொல்லிக்கொடுக்கிறது. ஒரு முறை பார்க்கலாம். கடைசியாக இதுபோல சரியலாக பார்த்த ஃபிக்ஷன் படம் "பஞ்சு மிட்டாய்" - ஃபேண்டஸி ஸ்கிரீன்பிளே கொஞ்சம் சோதனை அடிப்படையிலான சினிமா என்பதால் இந்த படம் எல்லோருக்குமே பிடிக்கும் என்று சொல்ல முடியாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக