லாஸ் ஏஞ்சலஸில் நடைபெறும் ஒரு வங்கிக்கொள்ளையை நடத்த முயற்சி செய்து உயிருக்கு ஆபத்தான கார் சேசிங்கில் மாட்டிக்கொண்டு சிக்கி தவிக்கும் ஒரு குழுவிடம் மாட்டிக்கொண்டு இருக்கும் ஆம்புலன்ஸ் பாராமெடிக் நிபுணரின் வாழ்க்கையின் அடுத்தடுத்த திருப்பங்களை மையமாகக் கொண்டு, அதிரடியான சாகசங்களுடன் நகரும் ஒரு ஹை-ஆக்டேன் திரில்லராகும்.
முன்னாள் ராணுவ வீரரான வில் ஷார்ப் தனது மனைவியின் மருத்துவ செலவுகளைச் சமாளிக்க முடியாமல், தன்னுடைய தம்பியான டேன்னி ஷார்ப் என்பவரிடம் உதவி கேட்கிறார். டேன்னி ஒரு வங்கி கொள்ளைகளை நடத்தும் குற்றவாளி; அவன் விலை உயர்ந்த வங்கிக்கொள்ளை ஒன்றில் விலைமதிப்புள்ள $32 மில்லியனை தனது வாழ்நாள் இலக்காகக் கொண்டிருக்கிறான். கொள்ளை தவறாக முடிவடைகிறது,
இதனால் அவர்கள் இருவரும் ஒரு ஆம்புலன்ஸை கடத்துகிறார்கள் — அதில் ஒரு காயமடைந்த போலீசாரும், ஒரு அவசர மருத்துவ உதவியாளரான கேம் தாம்ப்சனும் இருக்கிறார்கள். நகரம் முழுவதும் போலீசாரின் துரத்தலில், ஆம்புலன்ஸுக்குள் உள்ள மன அழுத்தம், நெருக்கடி மற்றும் உணர்வுப் போராட்டங்கள் கதையை மேலும் பரபரப்பாக மாற்றுகின்றன.
ஒரு தரமான கமேர்சியல் சாயம் பூசப்படாத மிக மிக சீரியஸ்சான ஒரு படத்தை நீங்கள் பார்க்க ஆசைப்பட்டால் இது உங்களுக்கான மிகவும் சரியான சாய்ஸ்ஸாக இருக்கலாம். கிளைமாக்ஸ் கொஞ்சம் டிஸப்பாயிண்ட்மெண்ட்டாக இருந்தாலும் கதைக்கு பொருத்தமாக இருந்தது என்றே சொல்லலாம் !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக