இந்த LAST SEEN ALIVE என்பது ஒரு அதிரடியும் பரபரப்பும் நிறைந்த திரில்லர் திரைப்படம். இதில் ஜெரார்ட் பட்லர் நடித்துள்ள கதாப்பாத்திரத்தை வேற லெவல்லில் டிசைன் பண்ணி எடுத்து இருக்கிறார்கள். சராசரி பிசினஸ் பண்ணும் நேர்மையான கணவராக இருக்கும் வில் ஸ்பேன் என்பவர், தனது மனைவி லிசாவை விவகாரத்துக்கு முன்னதாக சமாதானம் செய்து அவரது பெற்றோரிடம் விட்டுவிட ஒரு கார் பயணத்தில் செல்கிறார்.
ஆனால் ஒரு பெட்ரோல் நிலையத்தில் திடீரென லிசா காணாமல் போகிறார். போலீசார் விசாரணை நடத்தும் போதும், முன்னேற்றம் இல்லாததால் வில் தனியாகவே தனது மனைவியை தேட புறப்படுகிறார். இந்த தேடலில் அவர் பல கொடிய வில்லன்களால் கடத்தப்பட்டு மிகவுமே அபாயகரமான சூழ்நிலைகளையும், மறைமுக உலகத்தையும் எதிர்கொள்கிறார். நேரம் விரைந்து செல்லும் நிலையில், போலீஸ் துறையில் சந்தேகம் அவர்மேல் விழ, வில் தனது மனைவியை மீட்கவும், மறைவில் இருக்கும் உண்மையை வெளிக்கொணரவும் போராடுகிறார்.
இந்த படத்துடைய பின்னணி இசையும் காட்சி அமைப்புகளும் வேற லெவல்லில் கொண்டுவந்து இருக்கிறார்கள், நிறைய தரமான ஆக்ஷன் காட்சிகள் கதையோடு பின்னி பிணைந்து ஒரு கணவராக தன்னுடைய மனைவியை தேடும் போராட்டமாக இந்த படம் இருப்பது இந்த படத்துக்கு பெரிய பிளஸ் பாயிண்ட் என்றே சொல்லலாம் !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக