காதல் என்பது நிச்சயமாக இந்த உலகில் ஒரு தனித்துவமான உணர்வு. ஒரு மனிதனுக்கு, தனது வாழ்வாதாரமாக இன்னொருவரை ஏற்றுக்கொள்வதை விட, தனது வாழ்க்கையின் இறுதி வரை தன்னுடன் இருக்கக்கூடிய வாழ்க்கைத் துணையாக அவரை ஏற்றுக்கொள்வதை விட மகிழ்ச்சிகரமானது வேறு எதுவும் இல்லை.
நவீன வாழ்க்கையில் காதல் என்பது பணம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த விஷயமாக மாறிவிட்டது என்று சமூக ஊடகங்களில் மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவதை நாம் காண்கிறோம். கணவன்-மனைவி இடையேயான வெறுப்பு மற்றும் சண்டைகளையும், அதன் விளைவாக ஏற்படக்கூடிய விசித்திரமான சம்பவங்களையும் செய்தி சேனல்கள் நிறைய வெளியிடுவதை நாம் நம் கண்களால் காண்கிறோம்.
இது நம் வாழ்வின் அடுத்த பரிமாணமாக இருக்கப் போகிறதா என்ற கேள்வி எழுகிறது. கணவன் மனைவி என்ற உணர்வு எப்போதும் சுயநலத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என்ற அச்சத்தையும் இது சமூகத்தில் எழுப்புகிறது. வாழ்க்கையில் சந்தோஷங்கள் மற்றும் பொழுதுபோக்குக்கு அதிகமான நேரத்தை செலவழித்து நாம் சரியான செல்வத்தையும் பகுத்தறிவையும் கற்றுக்கொள்ள இயலாத ஒரு மனநிலைக்கு மாற்றப்பட்டு உள்ளோம்
ஒரு தனியார் நிறுவனம் எப்போதும் மக்களை நுகர்வோராகவும் வாடிக்கையாளர்களாகவும் வைத்திருந்தால் மட்டுமே அந்த நிறுவனம் மரியாதையையும் கண்ணியத்தையும் பெற முடியும். மக்களின் ஆசைகளையும் வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளையும் உருவாக்க உண்மையில் யார் போராடுகிறார்கள் என்பதைப் பற்றி சிந்தியுங்கள்.
நீங்க ஆசைப்படும் விஷயத்தையெல்லாம் அடைந்து கொண்டு ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தால் அந்த வாழ்க்கை அதிர்ஷ்டமானது என்று நினைத்துக் கொண்டு நீங்கள் இருக்கலாம். ஆனால் அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை நிஜமாகவே தவறானது.
வாழ்க்கை என்பது உங்களுக்கு ஆதரவு கொடுத்தவர்களுக்கு நீங்கள் அதனை விடவும் அதிகமாக ஆதரவு கொடுக்கும் பொழுது தான் இனிமையானதாக இருக்கும்.மற்றபடி தேவையற்ற விஷயங்களில் மூலமாக கிடைக்கும் சந்தோஷங்களின் மூலமாக நீங்கள் அதனை ஒரு ஆதாரமான கொண்டு வாழ்க்கையை நகர்த்திக்கொண்டு இருந்தால் உங்களுடைய.வயதான காலத்தில் உங்களுக்கு நீங்கள் செய்த தவறு கண்டிப்பாக புரியும்.
எனவே, காதலை அன்பாக மட்டுமே பாருங்கள். செல்வம், மகிழ்ச்சி போன்ற வெளிப்படையான விஷயங்களை காதலில் கொண்டு வராதீர்கள், இந்த வலைப்பதிவின் சார்பாக எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு அன்பான செய்தி இதுவாகும் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக