நம்முடைய வாழ்க்கை ஒரு சின்ன வட்டத்துக்குள் அடைபட்டு இருக்கப் போகிறது என்று இருக்கும் பொழுது நாம் தான் தனித்து போராடி நமக்கான வாழ்க்கை மிகவும் சிறப்பானதாக அமைத்துக் கொள்வதற்காக வேலை பார்க்கிறோம். இந்த விஷயத்தில் வெற்றி அடைவது நம்முடைய சக்திக்கு மீறிய செயலாக இருந்தாலும் நாம் முயற்சி செய்து தோற்றுப் போனாலும் பரவாயில்லை. நம்மிடம் இருக்கக்கூடிய பணத்தை இழந்தாலும் பரவாயில்லை.
நாம் இந்த விஷயத்தில் இந்த அனுபவத்தை கற்றுக் கொண்டே ஆகவேண்டும் என்று இறங்கி செய்வது ஒரு கட்டத்தில் பெருமைப்படக்கூடிய விஷயமாகத்தான் கருதப்படுகிறது.
இது எதனால் என்றால் நிறைய பேர் தங்களுடைய வாழ்க்கையில் ஒரு சின்ன வட்டத்துக்குள்ளேயே அடைந்து போனாலும் கிட்டத்தட்ட 30 - 40 வருடங்கள் கடந்து இந்த வட்டத்தை விட்டு வெளியே வந்த பின்னால் ஒரு வாழ்க்கை இருந்திருக்கிறதே அந்த வாழ்க்கையை நம்மால் எடுத்துக் கொண்டு ஜெயித்துக்காட்ட நமக்கு துணிவு இல்லாமல் போய்விட்டதே என்று மிகவும் வருத்தப்படுகிறார்கள்.
நம்முடைய வாழ்க்கை தோல்விகளில்தான் புதிய புதிய விஷயங்களை கற்றுக் கொள்கிறது. அதேபோல புதிய விஷயங்களை நாம் தோல்வி அடையாத நிலையில் கற்றுக்கொள்வதற்கும் தோல்வி அடைந்த பின்னால் கற்றுக் கொள்வதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.
உதாரணத்துக்கு தோல்வி அடைந்த பின்னால் கற்றுக்கொள்ளக்கூடிய அனுபவங்களும் பாடங்களும் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய சீர்திருத்தங்களை நமக்காக கொண்டு வந்து கொடுக்கும். நாம் வெற்றியை மட்டுமே அடைந்து கொண்டிருந்தால், தோல்வியை சந்திக்கும்போது நம் வாழ்க்கை சிதைந்துவிடும்.
அதனால்தான் வெற்றியும் தோல்வியும் சமமாக இருக்கும், தோல்வி மிகவும் முக்கியமான ஒரு வாழ்க்கையை வாழ்வது நல்லது. குறிப்பாக அனிருத் பாடலை போல பிரச்சனைகளை நேருக்கு நேராக எதிர்த்து சமாளித்து தோல்வியை சந்தித்து. சிதற விடுகிறோம் பதற விடுகிறோம் என்பது போல வாழ்க்கையில் சில நேரம் தோல்விகளை அடைந்தால் தான் நம்முடைய வாழ்க்கையில் நம்முடைய உடலும் மனதும் ஒரு குறிப்பிடத்தக்க துணிவையும் பலத்தையும் அப்கிரேட்களாக பெற்றுவிடும்.
இதனை காசு கொடுத்து எல்லாம் வாங்க முடியாது.நம்முடைய அனுபவங்கள் நமக்கு கொடுக்கக்கூடிய வலுவான சக்திகளாக இந்த விஷயங்கள் நமக்கு இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக