பல நேரங்களில் நமது கோபம் நியாயமானது, ஆனால் உலகம் அதைப் புரிந்துகொள்வதில்லை. இந்த உலகத்தில் தனித்து வேலை பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். சேர்ந்து வேலை பார்த்தவர்களும் இருக்கிறார்கள். தனித்து வேலை பார்ப்பவர்களுக்கு இருக்கக்கூடிய ஒரு பிளஸ் பாயிண்டாக கடத்தப்படுவது என்னவென்றால் அவர்கள் மற்றவர்களுடைய கருத்துக்களுக்கு மதிப்பு அதிகமாக கொடுக்க மாட்டார்கள்.
ஏனென்றால் மற்றவர்களுடைய கருத்தில் அவர்களுடைய சொந்த ஆதாயங்களும் இருக்கும். உதாரணத்துக்கு மற்றவர்களுக்கு உங்களுடைய கருத்து பிடிக்கவில்லை என்றால் அவர்கள் உங்களை தங்களில் ஒருவராக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மேலும் உங்களுடைய சரிவில் தான் அவர்களுடைய சந்தோஷமே இருக்கும்.
உங்கள் கோபம் நியாயமானது என்றால், உங்கள் கோபத்திற்கு நேர்மையான பலத்தை கொடுத்து மற்றவர்களின் முட்டாள்தனமான சறுக்கல் உருவாக்கும் கருத்துகளுக்கு அடிபணியாமல் தொடர்ந்து போராட வேண்டும்.
உங்கள் கோபம் நியாயமற்றது என்று தோன்றும்போது மட்டுமே உங்கள் கோபத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். நீங்கள் மறுபரிசீலனை செய்யும்போது, உங்கள் கோபம் நியாயமற்றது அல்லது நியாயமானது என்ற தேர்ந்தெடுக்கும் புள்ளியை நீங்கள் காணலாம்.
மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று யோசித்தால் நம்மால் இங்கே வாழவே முடியாது. அதனால் தான் நிறைய பேர் தங்களுடைய கோபத்தை சரியான ஆயுதமாகப் பயன்படுத்தி ஜெயித்து காட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக