ஞாயிறு, 26 அக்டோபர், 2025

கதைகள் பேசலாம் வாங்க - 1



சமீபத்தில் ஒரு இன்ட்ரஸ்டிங்கான நிஜவாழ்க்கை மனிதரின் கதையே கேட்க வேண்டியிருந்தது.டேனி என்ற ஒரு ஹாலிவுட் நடிகர் இருக்கிறார். அவருடைய வாழ்க்கையில் முழுவதுமே நடந்தது அனைத்துமே சோகம் தான் அவருடைய பெற்றோர்களுடைய விவாகரத்துக்கு பிறகு விவாகரத்தான அப்பா அம்மாவின் வீட்டில் தனித்தனியாக தங்கி வெறுப்பால் அதிகமாக தாக்கப்பட்டு கோபத்தில் தான் வளர்ந்தார். 

சிறு வயதிலேயே சிறு சிறு குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் விற்பனை வழக்கில் சிக்கி\ சிறைக்கு சென்று பின்னாட்களில் இளமைக் காலத்தில் தங்களுடைய வாழ்க்கையில் சரியான வேலை கிடைக்காமலும் கடந்த காலத்தில் குற்றச் செயல்களின் பதிவுகளாலும் கஷ்டப்பட்டிருக்கிறார். 

ஒரு சமயத்தில் தன்னுடைய நண்பர் ஒருவருக்கு அட்வைஸ் செய்வதற்காக ஒரு மோசமான நடன விடுதிக்கு செல்லும் பொழுது சினிமா தயாரிப்பில் இருக்கக்கூடிய ஒரு நபர் இவருடைய உடல் வாகை பார்த்து இவருக்கு ஒரு சினிமா துணை கதாப்பத்திரமாக நடிக்கும் வாய்ப்பை கொடுத்து இருக்கிறார்.

வாழ்க்கையில் கடினமான பல சம்பவங்களை சந்தித்த டேனி இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட அந்த கதாபாத்திரத்தில் நன்றாக நடித்து மேற்கொண்டு இன்னும் சில சினிமா வாய்ப்புகளை குவித்தார் ஒரு நல்ல நடிகராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். 

ஆனால், எந்தப் படத்திலாவது குற்றச் செயல்களில் ஈடுபடும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தால், அந்தக் கதாபாத்திரம் திரைக்கதையின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தீர்த்துக்கட்டப்பட்டு இறந்துபோவதாக காட்டினால்தான் அந்தக் வில்லனின் வேடத்தை ஏற்றுக்கொள்ள முடியும் என்று அவர் வேண்டுகோள் விடுப்பார். 

இதற்கான காரணத்தைக் கேட்டபோது, ​​குழந்தைகள் இந்த வில்லன் கதாபாத்திரங்களைப் பார்த்து கெட்டுப்போகக்கூடாது என்பதற்காகவும், வாழ்க்கையில் தவறான செயல்களைச் செய்தால் வாழ்க்கைக்கு உத்தரவாதம் இல்லை என்பதை அவர்கள் சிறு வயதிலேயே புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும் இவ்வாறு கூறினார். இதனால்தான் நான் அத்தகைய கதாபாத்திரங்களில் நடிக்கிறேன். இன்று, அவர் ஒரு இதயப்பூர்வமான பதிவையும் கொடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கதைகள் பேசலாம் வாங்க - 5

ஒரு சிலையை சுத்தியலால் அடித்து செதுக்கும்போது, ​​அந்தச் சிலையின் கடைசி அடியிலேயே அந்தச் சிலை சரியாக வடிவமைக்கப்பட்டால், சுத்தியலின் உரிமையாள...