ஒரு ரியாலிட்டி என்ற அடிப்படையில் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் நம்முடைய வருங்காலத்தின் வெற்றிகள் ஆனது வங்கி கணக்கின் அடிப்படையில் மட்டும் தான் உள்ளது.
இந்த உலகத்தில் நிறைய பணம் இருந்தால் சுதந்திரமாக வாழ முடியும். பணம் நமக்குள்ளே இல்லை என்றால் நாம் எவ்வளவுதான் கஷ்டப்பட்டாலும் நம்மால் மேலே வரமுடியாது. நாம் எதாவது ஒரு வேலையை கட்டாயத்தின் அடிப்படையில் செய்து கொண்டே இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.
பணம் உள்ளவர்கள் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்கிறார்கள். பணம் இல்லாதவர்கள் வெற்றி என்றால் என்னவென்று தெரியாத நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
சமீபத்திய கணினி விளையாட்டுகளில் ஒரு சொல் உள்ளது. பே - 2 - வின் வெற்றி பெறுவதற்கான பணம் கட்ட வேண்டிய பந்தயம் என்றால் இந்த வகையில் வெளியிடப்பட்ட விளையாட்டுகள் நீங்கள் நிறைய பணம் செலுத்தினால் மட்டுமே அந்த விளையாட்டுக்கான வெற்றி கூப்பன்களை உங்களுக்கு வழங்கும்.
இல்லையென்றால், நீங்கள் விரும்பாவிட்டாலும் தோல்வியுற்றவர்களின் பட்டியலில் சேர்க்கப்படுவீர்கள். உண்மையைச் சொல்லப் போனால், இன்றைய வாழ்க்கை அப்படித்தான் செல்கிறது. வாழ்க்கையில் பணம் இல்லையென்றால் எதுவும் இல்லை என்ற சூழ்நிலையை நீங்கள் காணலாம்.
பணமில்லாத வாழ்க்கை உங்களுடைய வாழ்க்கையை முழுவதையும் ஆபத்தான வாழ்க்கையாக மாற்றும். நீங்கள் வா சந்திக்கக்கூடிய அனைத்து மனிதர்களும் உங்களுக்கு ஆபத்தானவர்களாகத்தான் இருப்பார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக