வெள்ளி, 24 அக்டோபர், 2025

GENERAL TALKS - கற்றுக்கொள்வதில் முக்கியமான விஷயம் !

 


இங்குள்ள அனைவரும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர். ஆனால் அந்தப் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கு ஒரு சரியான பாதை இருக்கிறது. பெரும்பாலான நேரங்களில், அந்தப் பாதை கண்டுபிடிக்கப்படாமல் விடப்படுகிறது. அந்த சரியான பாதைக்கான மாயாஜாலமான வார்த்தை சொல்லுகிறேன். பேக்கேஜ் அதாவது ஒரு புதிய விஷயத்தை பேக்கேஜாக கற்றுக் கொள்ள வேண்டும். 

குறிப்பாக அந்த விஷயத்துக்கு தேவைப்பட்ட ஒரு சார்புள்ள ஒரு கான்செப்ட் பற்றிய விஷயத்தை மட்டும் தான் நீங்கள் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். மல்டிபிள் ஆக நிறைய விஷயங்களை நீங்கள்.தெரிந்து கொள்ள ஆசைப்பட்டு நிறைய ரேண்டமான தகவல்களை உங்களுடைய மேன்ட்க்குள் போட்டுக் கொண்டே இருந்தால் அது உங்களுக்கு பிரச்சனையாக தான் போய் முடியும்.

உதாரணத்துக்கு நீங்கள் போட்டோ எடிட்டிங் கற்றுக்கொள்ள வேண்டுமென்றால் போட்டிகளை மட்டும் தான் நீங்கள் அதிகமாக கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். அதனை தவிர்த்து அதற்கு சம்பந்தப்பட்ட விஷயங்களை கற்றுக் கொள்ளலாம். ஆனால் அதற்கு சம்பந்தமே இல்லாத நிறைய விஷயங்களை நீங்கள் கற்றுக் கொள்ள ஆசைப்படுவது அல்லது விஷயங்களை கற்றுக் கொள்வதை ஒரு பொழுதுபோக்காக பார்ப்பது நிறைய நேரங்களில் உங்களை பிரச்சினைக்குரிய கற்றல்.நிலைக்கு உங்களைத் தள்ளிவிடும்.

இதை ஒரு உதாரணமாகப் பார்ப்போம். இரண்டு தனித்தனி நபர்களுக்கு 10,000 தங்க நாணயங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால் வழங்கப்படும் முறைதான் சிக்கலானது 

முதல் நபருக்கு ஒரு காட்டின் நடுவில் ஒரு பெரிய நிலம் வழங்கப்படுகிறது. 10,000 தங்க நாணயங்கள் ஒரு சிறிய பெட்டியில் வைக்கப்பட்டு, பெட்டி எங்கே இருக்கிறது என்பதற்கான சின்ன குறிப்பும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

முதல் நபர் மிக விரைவாக, குறிப்பாக இரண்டு நாட்களுக்குள், தங்க நாணயங்கள் அடங்கிய பெட்டியைக் கண்டுபிடிப்பார். இரண்டாவது நபருக்கு காட்டின் நடுவில் ஒரு பெரிய நிலமும் வழங்கப்படுகிறது. ஆனால் அந்த நிலத்தில் எங்கு வேண்டுமானாலும் தங்க நாணயங்களை புதைந்து இருக்கலாம் என்ற புரிதல் அவருக்கு வழங்கப்படுகிறது. 

இந்த இரண்டாவது நபர் 10,000 தங்க நாணயங்களைப் பெற எவ்வளவு கடினமாக உழைக்கிறார் தெரியுமா? குறைந்தது இரண்டு வருடங்களாவது அந்தக் காட்டில் உள்ள அனைத்தையும் மிக விரைவாகத் தோண்ட வேண்டும். அவ்வளவு கடின உழைப்புக்கு மதிப்பு இருக்கிறது. தங்க நாணயங்கள் ஆழமாகப் பதிந்துள்ளன. இறுதியில் அவருக்கு அவை கிடைக்காமல் போகலாம்.

இல்லையென்றால், இந்த இரண்டாவது நபர் தங்களுக்கு வேலை செய்ய ஆட்களையும் இயந்திரங்களையும் அழைத்து வந்து இந்தக் காடுகளிலிருந்து தங்க நாணயங்களைப் பிரித்தெடுக்க முயற்சித்தால், செலவு மட்டும் சுமார் 6000 தங்க நாணயங்கள் இருக்கும் 

மீதமுள்ள 4000 தங்க நாணயங்களை சரியான வருமானமாகக் கருத முடியாது. எனவே இந்த இரண்டு விஷயங்களில் எது எளிதானது என்று நீங்கள் கருதுகிறீர்கள்? இந்தக் கட்டுரையைப் படிக்கும் ஒரு நபராக நீங்கள் எப்படி உணருகிறீர்கள்? 

அதேபோல், வலைத்தளத்தில் தேடல் மூலமாக தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை சரியான தொகுப்பில் கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் அதை விட்டுவிட்டு வீடியோக்களைப் பார்ப்பது அல்லது ஊடகங்களைக் கேட்பது கற்றல், பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டுத்தனத்திற்கான ஒரு விஷயமாகக் கருதினால், உங்கள் முடிவுகள் நிறைய நேரத்தையும் செலவையும் மட்டுமே உருவாக்கும்.

கருத்துகள் இல்லை:

GENERAL TALKS - 001

நம்பிக்கை என்பது வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு கருத்து. நம்பிக்கை இல்லையென்றால், நம்மைச் சுற்றியுள்ள மக்கள் மீதோ, நாம் எடுக்கக்கூடிய செயல்...