ஞாயிறு, 26 அக்டோபர், 2025

GENERAL TALKS - எப்பொழுதும் ஒரே வேலையை செய்யும் மக்கள் !



ஒரு நாளின் இருபத்து நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை சூரிய உதயத்தைக் காண்கிறோம். அதேபோல், நம் வாழ்வில் எப்போதும் ஒரு சூரிய உதயம் இருக்குமா என்ற கேள்வி நமக்குள் எழுகிறது. குறிப்பாக பணமே இல்லாத வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தால் நம்முடைய வாழ்க்கையில் எப்போது பணம் சம்பாதிக்கப் போகிறோம். 

நம்முடைய வாழ்க்கையின் தரம் எப்பொழுதும் மற்ற சந்தோஷமாக வாழக்கூடிய பணக்காரர்களின் வாழ்க்கை தரத்திற்கு இணையானதாக மாறும் என்ற இயக்கம் ஒரு சராசரி இளம் தலைமுறையிடமும் பணம் இல்லாத நேரங்களில் இருக்கிறது. 

இப்போது வேலைக்குச் செல்லக்கூடிய ஒரு இளைஞனை நாம் கவனித்து பார்க்கலாமா? அதாவது, அவர் தினமும் காலையில் எழுந்திருப்பார். காலையில் தேவையான அனைத்து வேலைகளையும் செய்துவிட்டு அலுவலகம் செல்வார். அங்கு தேவையான அனைத்து வேலைகளையும் செய்துவிட்டு மீண்டும் வீடு திரும்புவார். அவர் சோர்வடைவார். தூங்குவார். காலையில் மீண்டும் அதே வேலையைச் செய்வார். 

வேலைக்குச் செல்லாத இளைஞன் கூட டிவியிலும் ஸ்மார்ட்போனிலும் பொழுதுபோக்கு வீடியோக்களைப் பார்க்கிறார், நண்பர்களுடன் பேசுகிறார், கணினி விளையாட்டுக்களை விளையாடுகிறார், ஊர் சுற்றுகிறார் பிறகு மீண்டும் தூங்கச் செல்கிறார். 

இந்த இரண்டு விஷயங்களும் வாழ்க்கையில் உங்களை பணக்காரராக்குமா? நிச்சயமாக இல்லை. எப்போதும் கடினமாக உழைத்து பணப்புழக்கத்தை நன்றாக கற்றுக்கொண்டு பயன்படுத்திக் கொள்பவர்களுக்கு மட்டுமே பணம் பயனுள்ளதாக இருக்கும். 

பணமும் ஒரு வகையான அறிவியல்தான். நீங்கள் அதை அறிவு இல்லாமல் பயன்படுத்தினால், சோதனைகளில் நடக்கும் விபத்துகளைப் போலவே, உங்களுக்கும் விபத்துகள் ஏற்படலாம். கவனமாக பயன்படுத்தவர்களிடம் மட்டுமே பணம் அதிகமாக சேருகிறது. 

எல்லா நேரங்களிலும் ஒரே காரியத்தைச் செய்வது மோசமான விஷயம் என்று சொல்ல முடியாது. ஆனால் நிஜ வாழ்க்கையில், நீங்கள் பணக்காரராகி உச்சத்தை அடைய விரும்பினால், தினமும் ஒரே காரியத்தைச் செய்வது உங்களை எங்கும் கொண்டு செல்லாது. உங்கள் வாழ்க்கையை மாற்ற நீங்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்பதை உணருங்கள்.

கருத்துகள் இல்லை:

கதைகள் பேசலாம் வாங்க - 5

ஒரு சிலையை சுத்தியலால் அடித்து செதுக்கும்போது, ​​அந்தச் சிலையின் கடைசி அடியிலேயே அந்தச் சிலை சரியாக வடிவமைக்கப்பட்டால், சுத்தியலின் உரிமையாள...