ஒரு புத்தகத்தை எழுதுவது என்பது ஒரு மிகவுமே மந்தமான பயணம். நிறைய நாட்களுக்கு நிலைத்து ஒரு புத்தக விற்பனை சாதனைகளை படைக்கவேண்டும் என்றால் இது பொறுமையும், நிலைத்த முயற்சியும், ஆழமான சிந்தனையும் தேவைப்படும் ஒரு வேலைப்பாடு என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
ஒரு சிறுகதையை எழுதுவதை விட, நாவலுக்கு கதையின் கட்டமைப்பு, கதாபாத்திர வளர்ச்சி, கருப்பொருள் ஆழம் மற்றும் சூழலின் விரிவான உருவாக்கம் இவை இயற்கையாகவே உருவாக நேரம் எடுத்துக்கொள்கின்றன. அப்படி இருக்கும்போது இன்னுமே வேகமாக புத்தகங்களை எழுதுவது என்பது இம்போஸ்சிபல்தானே ?
எழுத்தாளர்கள் பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் வரை கதைக்கான ஒரு வரைபடம், திருத்தம், மீளாய்வு போன்ற பணிகளில் கஷ்டப்பட்டு ஈடுபடுகிறார்கள். எழுத்துப் பிழைகள், சந்தேகம், மற்றும் கதையின் ஒற்றுமையை பராமரிக்க வேண்டிய சவால்கள் இவைகள் இவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் வழக்கமானவை. ஒரு கதையை வாசகர்கள் முழுமையாக மூழ்கி அனுபவிக்கக்கூடியதாக உருவாக்குவது என்பது ஒரு மாயாஜாலம் அது ஒரே இரவில் நிகழ்வதில்லை.
கதைகளை எழுதுபவர்கள் இந்த விஷயங்களை யோசித்து செயல்பட வேண்டும். உங்களுடைய மன வலிமை அதிகமாக இருக்க வேண்டும். சுற்றி இருப்பவர்கள் உங்களை வெறுத்தாலும் இந்த துறையில் நீங்கள் ஜெயிக்க வேண்டும் என்றால் கஷ்டப்பட்டு போராடித்தான் ஆகவேண்டும் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக