நிறைய ART பிலிம்மாக பார்த்து பார்த்து இப்பொது எல்லாம் கமேர்சியல் சினிமாக்களை பார்க்கும் யோசனையும் வந்துவிட்டது. அலெக்ஸ் பாண்டியன் - பணத்துக்காக CM மகளை கடத்தும் ஒரு இளைஞர் நம்ம ஹீரோ கார்த்தி - சம்மந்தமே இல்லாமல் சந்தானத்தின் வீட்டில் கேஸட்டாக இருந்து சந்தானத்தின் தங்கைகளோடு ரொமான்டிக் பேச்சுக்களும் காமேடியும் என்று தனியாக ஒரு காமெடி டிராக் ! - எப்போதும் போல 4 பாட்டு , 4 சண்டை காட்சிகள் , நிறைய காமெடியோடு கூடிய திரைக்கதை என்று கமேர்ஸியல் படங்களுக்கு தேவைப்படும் பொருத்தங்களோடு ஒரு படம், இப்போது எல்லாம் GOOD BAD UGLY போல மொக்கை படங்களை எல்லாம் இந்த வகை படங்கள்தான் இன்ஸ்பெர் பண்ணுகிறது, வெங்கட் பிரபு - பிரியாணி திரைப்படத்தில் இருந்து இந்த படத்தில் இல்லாத ஒரு விஷயம் கதைதான், கதை என்று வெறும் ஒரு வரிதான் இருக்கிறது. தமிழ் ஆடியன்ஸின் ரசனைக்கு ஏற்ப மசாலா ஆக்ஷன் படங்களை எல்லாம் ஒரு அலசு அலசி பெஸ்ட்டாக தோன்றிய காட்சிகளை படமாக கொடுத்து இருக்கிறார்கள் ! கதை ஒரு முக்கியமான பகுப்பாய்வு அல்லது சமூக விமர்சனத்தை நோக்கி இருக்குமானால் இந்த அளவுக்கு கமேர்ஸியல் சாயல் தூக்கலாக வைக்க காரணம் என்ன ? குசேலன் படத்தை விட சிறப்பாக உள்ளது ஆனால் பெட்ட படம் அளவுக்கு இல்லை. கார்த்தி எப்போதும் ஜப்பான் , அலெக்ஸ் பாண்டியன் போன்ற படங்களை கவனமாக இனிமேல் தேர்ந்தெடுக்காமல் இருந்தால் நல்லது, இந்த படத்தை மேலோட்டமாக கதைக்கும் - ஒரு பழைய ஸ்டைல் காமெடிக்கும் எதிர்பார்த்து பார்த்தால் நீங்கள் கிளைமாக்ஸ் காட்சியின் சராசரியான யூசுவல் வில்லன்களை பறக்கவிடும் சண்டை காட்சிகளை மன்னித்துவிடும் அளவுக்கு பாக்குவப்படலாம், நம்ம ஆட்கள்தான் வலிமை போன்ற படத்துக்கு ஆதரவு கொடுக்காமல் குட் பேட் அக்லி போல சுமாரான படத்துக்கு பேரதரவு ஹிட் கொடுக்கிறார்கள் என்றால் மூளை சுருங்கிவிட்டது என்ற கட்டத்தில் இது போன்ற படங்களுக்கு ரசனை கூடுகிறது. சிறுத்தை படமே என்னை பொறுத்தவரை சுமாரான படம்தான் ! இது அதை விட சுமாராக ஒரு எமோஷனல் ஆர்க் இல்லாமல் இருப்பதாலோ வெற்றியை அடையவில்லை !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக