சமீபத்தில் ஒரு உயர் ரக மிட்டாய் தயாரிப்பு நிறுவனத்தின் கோடீஸ்வர உரிமையாளரிடம் ஒரு முக்கியமான கேட்டபோது, அவர் சொன்னது இதுதான். உங்களுடைய உயர்தர சாக்லேட்டுகள் மிகவும் அதிகமாக விலை நிர்ணயம் செய்யப்படுவதைபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அவை ஏன் இவ்வளவு விலை உயர்ந்தவை என்று கேட்டபோது அவர், "அவை உயர்தர சாக்லேட்டுகள். நான் சாக்லேட்டை விற்பனை செய்வதில்லை. அந்த சாக்லேட்டுக்கான மரியாதையை அதிகரிக்க பிராண்டிங் மற்றும் பேக்கேஜிங் போன்ற விஷயங்களைச் செய்கிறேன்" என்றார். அவர், "நான் சாக்லேட்டை விற்பனை செய்வதில்லை. மரியாதையை விற்பனை செய்துகொண்டு இருக்கிறேன்" என்பது போன்ற பதிலைக் கொடுத்தார்.
இவருடைய பேர்ஸ்பெக்டிவில் இருந்து பார்த்தால் குறைவாக விலை நிர்ணயம் செய்யப்பட்ட பொருட்கள் தரமான பொருட்களாக இருந்தாலும் அவற்றை வாங்குவதை வாடிக்கையாளர்கள் வேண்டுமென்றே தவிர்க்கிறார்கள்.
இதற்கு மாறாக சுமாரான பொருட்களுக்கு அதிகமாக விற்பனை விலை நிர்ணயம் செய்யப்பட்டால் அந்த பொருட்களில் அந்த அளவுக்கு தரம் இல்லை என்றாலும் மக்கள் அந்த பொருட்களை சொந்த காசை போட்டு வாங்கி இன்னொருவருக்கு கொடுப்பதன் மூலமாக கிடைக்கும் அல்லது அந்த பொருட்களை வைத்திருப்பதன் மூலமாக இன்னொருவர் பார்த்து இவ்வளவு காஸ்ட்லியான பொருளை இவர் வைத்துள்ளார் என்ற நினைப்பை கொடுப்பதன் மூலமாக மரியாதை கிடைக்கும் என்பது போன்ற ஒரு தவறான நம்பிக்கையில் இருக்கிறார்கள்.
இந்த நம்பிக்கை பணமாக மாற்ற முடியாத விஷயம் கிடையாது. இந்த நம்பிக்கையும் பணமாக மாற்றலாமே என்பதுதான் இவருடைய பிசினஸ் பேர்ஸ்பெக்டிவில் நல்ல யோசனையாக இருந்திருக்கிறது ! இப்படி தான் உலகத்தின் போக்கு சென்று கொண்டிருக்கிறது மக்களே. இங்கே முதலாளித்துவத்தை மட்டுமே உலகம் அதிகம் விரும்புகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக