நம்முடைய வாழ்க்கையில் கட்டாயப்படுத்தி அடைய வேண்டும் என்று நினைக்க கூடிய விஷயங்கள். குறிப்பாக நாம் அதிகமாக அழுத்தம் கொடுத்து அடைய முற்படும் விஷயங்கள் , இப்படிப்பட்ட விஷயங்கள்தான் நமக்கு கிடைப்பது மிகவும் கடினமானதாக இருக்கிறது.
அதுவே நாம் அந்த விஷயங்களுக்கு அருகில் செல்லக் கூடிய அளவுக்கு நிதானமாக ஒரு காந்த தன்மையை மற்றும் விரும்பும் பொருளை அடைய ஒரு திசைவேகத்தை நமக்குள்ளே உருவாக்கிக் கொண்டால் சரியான நேரத்தில் அந்த விஷயம் நமக்காகவே நமக்கு கிடைத்துவிடும்.
இந்த கருத்தின் சரியான நோக்கம் என்னவென்றால் நாம் எந்த விஷயத்தை ஆசைப்படுகிறோமோ அந்த விஷயத்தைப்பற்றி மிகவும் அதிகபட்சமாக கற்றுக்கொள்ள வேண்டும். அப்படி கற்றுக்கொண்டால்தான் நாம் மோசமான உழைப்பு கொடுத்தாலும் காலத்தால் விஷயம் சரியானதாக முடியும்.
அப்போதுதான் அந்த விஷயத்தை நம்மால் மற்றவர்களை போல கஷ்டப்படாமல் ஈஸியாக அடைய முடியும். இது எந்த வகையில் சாத்தியப்படும் என்றால் உதாரணத்துக்கு நீங்கள் ஒரு பொறியாளர் பணியை தேர்ந்தெடுக்க விரும்பினால் பொறியாளராக தேவைப்படக்கூடிய அனைத்து விஷயங்களையும் நீங்கள் மிக அதிகமாக கற்றுக் கொள்ளவேண்டும்.
அப்படி கற்றுக் கொண்டால் உங்களுக்கு தேவையான வேலைகள் கிடைக்கும்பொழுது நீங்கள் உங்களுக்கான சிறந்த புகழையும், பொலிவையும் பெறுவீர்கள். காரணம் என்னவென்றால் நீங்கள் கற்றுக்கொண்ட விஷயங்கள் உங்களுடைய இந்த துறையில் மிக வேகமாக உங்களுக்கு வெற்றியையும் முன்னேற்றத்தையும் பெரும் பதவிகளையும் கொடுத்து விடும்.
தனித்தனி பொருட்களை எடுத்து ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர்த்துவதற்குப் பதிலாக, அவற்றை ஒரு பெட்டியில் வைப்பதன் மூலமோ அல்லது ரயில் எஞ்சின் போல ஒன்றாக கோர்த்து கட்டி இழுப்பதன் மூலமோ நாம் மிக அதிக வேக இயக்கத்தை அடைய முடியும்.
ஆரம்பத்தில் இவற்றையெல்லாம் புரிந்துகொள்வது கடினமாக இருக்கலாம், ஆனால் நாம் முன்னேறுவோம் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால், இந்த வகையான கலைகளில் நீங்கள் எளிதாக தேர்ச்சி பெறுவீர்கள். தங்களின் நாற்பதாவது வயதுகளில் கூட தங்கள் வாழ்க்கையை மாற்றியமைத்த பலர் உள்ளனர்.
அவர்கள் சராசரியாக இருந்து வெற்றிகரமான தொழில்முனைவோராக மாறுவதற்குக் காரணம், அவர்கள் தங்கள் அறிவை விரிவுபடுத்தி, நிறைய தகவல்களைக் கற்றுக்கொள்வதே ஆகும்.
 
 
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக