ஞாயிறு, 26 அக்டோபர், 2025

GENERAL TALKS - இப்போது புரிந்து கொள்ளுங்கள் மக்களே !



இந்த காலத்தில் நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் தொலைபேசிகளிலேயே நவீன ஆர்ட்டிபிஸியல் சுய ஆராய்ச்சிகளின் மூலம் நாம் கேட்கக்கூடிய அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கக்கூடிய பயன்பாடுகள் இப்போது உள்ளன. 

இந்த பயன்பாடுகளைப் பயன்படுத்துவது இப்போது மிகவும் மகிழ்ச்சியான விஷயமாக இருக்கலாம். ஆனால் எதிர்காலத்தில் இந்த பயன்பாடுகள் அனைத்தும் பணத்தால் வாங்கக்கூடிய பயன்பாடுகளாக மாறினால் பலருக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ளும் நல்ல வாய்ப்புகள் கிடைக்காத சூழ்நிலை ஏற்படும். 

மற்றவர்கள் தங்கள் வாழ்க்கையில் அவர்கள் அறிந்த விஷயங்களை விட அதிகமான விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் திறன்கள், பணத்தின் அடிப்படையில் பெறப்பட்ட திறன்களாக மட்டுமே மாறும் அளவுக்கு இந்த விஷயங்கள் மாறுமா என்ற கேள்வி எழுகிறது.

இப்படி பணத்தின் அடிப்படையில்தான் நிறைய விஷயங்களை பணம் கொடுத்து தெரிந்து கொள்வதன் அடிப்படையில் தான் வருங்காலத்தில் சமூகம் இருக்கப்போகிறது என்றால் அது சங்கடமானது. உண்மையை சொல்ல போனால் இது நேரடியான திறமையாக கணக்கில் ஆகாது. 

அதாவது திறமையானவர்கள் என்ன பதில்களை சொல்கிறார்களோ அந்த பதில்களை இவர்களும் சொல்வார்கள் என்பது போலத்தான்.ஒரு.ஆர்டிபிஷியல் இண்டெலிஜன்ஸ் இன் மூலமாக கிடைக்கப்பெறும் அறிவாற்றல் இருக்கும்

பெரும்பாலான நேரங்களில், உளவியல் ஆராய்ச்சியாளர்கள் கூறக்கூடிய கருத்து என்னவென்றால், செயற்கை நுண்ணறிவு வழங்கக்கூடிய பதில்களைக் கொண்டு மட்டுமே நம் வாழ்க்கையை வாழ முடியும் என்ற எண்ணத்தை இன்றைய மக்கள் கைவிட வேண்டும். உண்மை என்னவென்றால், செயற்கை நுண்ணறிவை விட, சுய ஆராய்ச்சி கடந்த காலத்தின் ஒரு விஷயமாக மாற நம் மக்கள் அனுமதிக்கக்கூடாது. சுய ஆராய்ச்சி செய்து நமது அறிவை வளர்த்துக் கொள்வது எப்போதும் நல்லது.

கருத்துகள் இல்லை:

கதைகள் பேசலாம் வாங்க - 5

ஒரு சிலையை சுத்தியலால் அடித்து செதுக்கும்போது, ​​அந்தச் சிலையின் கடைசி அடியிலேயே அந்தச் சிலை சரியாக வடிவமைக்கப்பட்டால், சுத்தியலின் உரிமையாள...