குடும்ப சண்டை காரணமாக நடந்த அசம்பாவித்ததால் பல வருடங்கள் சிறைக்கு அனுப்பப்பட்டு, பல வருடங்கள் சிறையில் இருந்த பிறகு விடுவிக்கப்பட்ட ஒரு தந்தை, அந்த தந்தையின் ஆதரவு இல்லாமல் தங்கள் தாயுடன் தனியாக வளர்ந்த இரண்டு குழந்தைகள், இந்த சந்திப்பு அவர்களின் அன்பை மீட்டெடுக்குமா?
அதே நேரத்தில், பல வருடங்களாக நீடிக்கும் ஒரு பகைமைக்காக பள்ளிகளைத் தாக்கத் திட்டமிடும் ஒரு வில்லனிடமிருந்து இந்தக் குடும்பம் தப்பிக்குமா என்பது போன்ற சுவாரஸ்யமான விஷயங்களை இந்தப் படம் முன்வைக்கிறது, தற்போதைய வாழ்க்கையின் யதார்த்தத்துடன் கலந்து கொடுத்த ஒரு படம்தான் இந்த வானம் கொட்டட்டும்.
இந்த படத்துக்கு எதார்த்தமான கதைக் களமும், காட்சி அமைப்பும் இந்த படத்துக்கு மிகவும் தனித்த ஒரு சூழ்நிலையை வழங்குகிறது. மேலும் இந்த படம் ஒவ்வொரு காட்சியிலும் மிகவும் தெளிவாக கேமரா வொர்க் செய்யப்பட்டு ஒரு சினிமாடிக் ஆஸ்பெக்ட் ரேஷியோவில் எடுக்கப்பட்டுள்ளது.
கதையில் முதிர்ச்சி இருந்தாலும், முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள் எதுவும் இல்லாததால், குடும்பத்துடன் பார்க்கக்கூடிய ஒரு சராசரி நாடகமாக இந்தப் படம் நகர்கிறது. உச்சகட்ட பொழுதுபோக்கு திரைப்படங்களுக்கு மத்தியில் இதுபோன்ற வாழ்க்கையின் ஒரு பாகத்தை கொடுக்கும் திரைப்படங்களும் நல்ல வரவேற்பைப் பெறுவது நல்ல விஷயமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக