வாழ்க்கையின் இயந்திரத்தனமான தன்மை எனக்குள் நிறைய கேள்விகளைக் கேட்கிறது. நான் சுதந்திரமாக முடிவுகளை எடுக்க வேண்டும் என்று நினைத்து தவறான முடிவுகளை எடுத்தேனா? வாழ்க்கை மிகவும் நம்பிக்கையூட்டுவதாகத் தெரிகிறது. இவ்வளவு நம்பிக்கை கொடுக்கப்பட்டு இறந்த காலத்தில் படங்கள் இப்போது நம் கண்களுக்கு முன்பாக விரிகின்றன. இவை அனைத்துமே மனதுக்குள்ளே மிகப்பெரிய மனச்சோர்வை கொண்டு வந்துள்ளது. நாம் எவ்வளவுதான் போராடினாலும் இந்த விளையாட்டை நம்மள ஜெயிக்கவே முடியாது. காரணம் என்னவென்றால் இந்த விளையாட்டு நாம் அவர்களுக்கு அடிமையாகிவிட வேண்டியதற்காக தான் இந்த விஷயத்தில் சுதந்திரத்தை அடைவது என்பது யோசிக்காமல் வெகுவான புரட்சிகரமான மனநிலையை மட்டுமே கொண்டு அதை அடைந்துவிடலாம் என்று நினைப்பவர்களுக்கு சாத்தியமானது அல்ல. உண்மையில் என்ன வென்றால் எவ்வளவுதான் நாம் கஷ்டப்பட்டாலும் அதிர்ஷ்டம் இல்லாவிட்டால் நமக்கு எதுவுமே கிடைக்காது. அதிர்ஷ்டம் இருந்தால் தான் நமக்கான எல்லாமே கிடைக்கும். மனிதர்கள் அதிர்ஷ்டத்தை நம்பாமல் உழைப்பை நம்புங்கள் என்று சொல்லுவதெல்லாம் சமூகத்தின் பெரிய மனிதர்களிடம் இருந்து சொல்லப்படும் கட்டுக்கதையாகத்தான் இப்பொழுதெல்லாம் தோன்றுகிறது. கருத்துக்களைக் கைவிட்டு செயல்படத் தொடங்குவதன் மூலம் மட்டுமே, வரும் நாட்களில் நாம் இதுவரை கண்ட இழப்புகளைக் கட்டமைத்து சரிசெய்ய முடியும், மேலும் வரும் நாட்களில் புதிய வருமானத்தை உருவாக்க முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக