செவ்வாய், 21 அக்டோபர், 2025

GENERAL TALKS - நம்பிக்கையும் இயந்திரத்தனமும் !

 


நம் வாழ்வில் பெரும்பகுதி இயந்திர வேலைகளைச் செய்வதிலேயே கழிகிறது. நம் வாழ்க்கை நம்மை இயந்திரங்களைப் போல வாழ கட்டாயப்படுத்துகிறது, இந்த வகையான வேலைகளை மட்டுமே செய்கிறது. முன்னதாக சொன்னது போல வாழ்க்கை பணம் இருப்பவனுக்கு நெருக்கமான நண்பனாக இருக்கிறது. அதுவே பணம் இல்லாதவனுக்கு வலிமையான எதிரியாக இருக்கிறது. ஒரு எழுத்தாளர் எழுதியதுபோல குற்றங்களை செய்யாமலிருக்க வேண்டும் என்று நினைக்கும் மனிதர்களையே வாழ்க்கை மிகவும் அதிகமாக தண்டிக்கிறது. இந்த விஷயங்களில் நாம் மாற்றத்தைக் கொண்டு வர முடியும். ஆனால் பணத்திற்காக நாம் தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இதன் விளைவாக, நம் வாழ்க்கையின் பெரும்பகுதியை பணம் சம்பாதிப்பதிலேயே செலவிடுகிறோம். பணம் இல்லையென்றால், வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளை நாம் இழந்துவிடுவோம். இந்தச் சமூகத்தின் காரணமாகவே நான் இதைப் பார்க்கிறேன். வாழ்க்கை ஒரு அமைதியான பூங்கா என்ற கருத்தை இந்தக் கோட்பாடுகள் முற்றிலுமாக உடைக்கின்றன. பயப்படுபவர்களுக்கு இங்கே ஒருபோதும் வெற்றி இல்லை, அறியாமையை துறந்தவர்களுக்கு இங்கே ஒருபோதும் தோல்வி இல்லை. நாம் எந்த விஷயங்களும் சரியானது என்றும் எந்தெந்த விஷயங்களில் தவறான என்று யோசித்து தான் முடிவு செய்கிறோம். இதனால் தான் நாம் வாழ்க்கையை கவனமான ஒரு விளையாட்டாக கருதுகிறோம்.

கருத்துகள் இல்லை:

GENERAL TALKS - பிரபஞ்சத்துக்கு எதிராக போராட்டம் !!

  பிரபஞ்ச சக்திகளை எதிர்த்து நாம் செய்யும் வேலைகள் அனைத்தும் கடைசியில் பூஜ்ஜியமாக முடிகிறது என்ற உணர்வு பலருக்கும் வருகிறது. ஆனால், பிரபஞ்சத...