திங்கள், 27 அக்டோபர், 2025

GENERAL TALKS - கொஞ்சம் வாழ்க்கை கொஞ்சம் கனவுகள் ! #1



வாழ்க்கையில் புயல் போல பிரச்சனைகள் நம்மை எப்போதும் தாக்கினால், நம் பலத்தை அதிகரிக்க கவனமாக இருக்க வேண்டும். வாழ்க்கையில், துக்கங்கள் வருவது உறுதி, கடினமான பாதைகளை நாம் கடக்க வேண்டும். ஆனால், நம் பலம் நமக்கு ஆதரவாக இருக்கும். 

அதிர்ஷ்டசாலிகள், தங்கள் பலத்தாலும் பணத்தாலும், தங்கள் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்துக் கொள்கிறார்கள். அதிர்ஷ்டம் இல்லாதவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இந்த பதிப்பு அதிர்ஷ்டம் இல்லாதவர்கள் எப்படி தங்களுடைய வாழ்க்கையில் மேம்படலாம் என்பதைப் பொறுத்தது ஆகும். 

ஆகவே மக்களே நம்முடைய வாழ்க்கையின் எந்த கனவுகளாக இருந்தாலும் நாம் தான் அந்த கனவுகளுக்காக போராட வேண்டும். கனவுகளை நாம் விட்டுக் கொடுத்துவிட்டால் வாழ்க்கை நம்மை கட்டிப் போட்டுவிடும்.

நாம் நம்மை சந்தேகிப்பதை நிறுத்திவிட்டு, துணிச்சலை வளர்த்துக்கொண்டு, துணிச்சலுடன் செயல்படும்போதுதான் இவைகள் அனைத்துமே நடக்கும். நம் கனவுகள் சாத்தியமாகும் தருணங்களை நம் கண் முன்னே காணலாம்.

நம் வாழ்வில் மிகுந்த வலியை அனுபவிக்கும்போதுதான் நாம் மகத்தான வலிமையை உணர முடியும். வழிகளை அனுபவிக்காத சாதாரண மக்கள் இந்த வலிமையை ஒருபோதும் இறுதிவரை வளர்த்துக் கொள்ள மாட்டார்கள்.

நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் எப்படிப்பட்ட அளவுக்கு கடினமாக தோற்றுப் போனாலும் உங்களுடைய தோல்விகளை ஒப்புக் கொண்டு அடுத்த கட்டமாக மறுபடியும் மறுபடியும் போராடிக் கொண்டே இருங்கள். ஏனென்றால் எப்போதுமே நம்முடைய தோல்விதான் நாம் ஒரு மிகப்பெரிய வெற்றியாளர் என்பதற்கான அடையாளம்.


கருத்துகள் இல்லை:

CINEMA TALKS - SHARK BOY AND LAVA GIRL MOVIE - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

  மேக்ஸ் என்ற பத்து வயது சிறுவன், தனிமையும் பள்ளியில் துன்புறுத்தலையும் சந்திக்கிறான். அதிலிருந்து தப்பிக்க, அவன் பிளானெட் ட்ரூல் என்ற கனவுல...