மக்கள் தங்கள் வாழ்க்கையில் முன்னேறாமல் இருப்பதற்கு அவர்களே காரணம் என்று நாம் நினைக்கக்கூடாது. அவர்களைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளும் அவர்களின் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அவர்கள் முன்னேற்றத்தை நோக்கிய ஒவ்வொரு அடியையும் அழித்துவிடக்கூடும். இந்த நேரத்தில் இதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த உலகத்திலேயே மிகவும் மதிப்புமிக்கதாகக் கருதப்படுவது எது தெரியுமா? அதுதான் விடுதலை.
நம்மைச் சுற்றியுள்ள மக்களோ அல்லது நம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளோ நாம் அதிகமாக சம்பாதிக்கக்கூடிய நிலைகளுக்குச் செல்வதைத் தடுத்தால், நாம் ஒருபோதும் உண்மையிலேயே முன்னேற முடியாது. இதற்கு உண்மையான காரணம் என்ன? நம்மிடம் போதுமான திறமை இல்லாததால்தானா? நிச்சயமாக இல்லை. நாம் எப்போதும் திறமையானவர்கள். ஆனால் உண்மை என்னவென்றால், அதைப் பயன்படுத்த சரியான நேரத்தை அடைவதில் இருந்து நாம் தடுக்கப்படுகிறோம்.
இன்றைக்கு எப்பொழுதுமே மனிதர்கள் ஒரு சின்ன சூழ்நிலைக்குள்ளே அடைப்பட்டு இருக்கும் வாழ்க்கையை அந்த சந்தோஷங்கள் கொண்டாடப்பட்டு வாழ்ந்தால் நன்றாக இருப்பதாக விரும்புகிறார்கள்.
மளிகை கடைக்கு சென்று பொருட்களை வாங்கிக் கொள்வது தண்ணீர் மற்றும் இணையதள வசதி, மின்சார வசதி என்று வசதிகளை நாம் கட்டணம் கட்டி பெறுவது என்பது போன்ற ஒரு குறிப்பிட்ட இஷ்டத்துக்குள்ளேயே நாம் மாட்டிக் கொண்டிருப்பதை தான் வாழ்க்கை என்று வாழ்ந்துவிட்டு நமது அறிவுத்திறன் வளர்ந்த பின்னால் ஒரு சில நேரங்களில் கவனமாக யோசித்து விடுதலையின் அருமை தெரியும்போது அவர்கள் கஷ்டப்பட்டு போராடி பணத்தை சம்பாதித்து அதன் மூலமாக ஜெயித்து காட்ட வேண்டும் என்று நினைக்கிறார்கள்
ஆகவே விடுதலை பற்றி இது போன்ற பேச்சுகள் நமக்கு இப்போதைக்கு புரியாத புதிராக தான் இருக்கும். ஆனால் வாழ்க்கையின் அடிப்படையான தன்மையை நாம் உணர்ந்த அந்த தருணத்தில் விடுதலை எந்த அளவுக்கு புனிதமான விஷயம் என்பதை நாம் உணர்ந்து கொள்வோம். அது வரையிலும் அது சராசரியான சாதாரணமான ஒரு குறிப்பாக தான் நம்முடைய வாழ்க்கையில் சந்தோஷம் இருக்க போகிறது என்பதையும் மறுக்க முடியாது.
விடுதலைக்கு ஆசைப்பட்டு வேலை பார்த்தால்தான் நம் மனம் வேகமாகச் செயல்படுகிறது என்பதை உணரும்போதுதான், நம் எண்ணங்களில் நோக்கி நாம் எவ்வளவு அதிகமாக பாடுபடுகிறோமோ அந்த அளவுக்கு தண்ணீருக்காக தண்ணீர் லாரியைப் பின்தொடரும் சராசரி மனிதராக நாம் இருக்கப் போகிறோமா ? அல்லது நம் மொட்டை மாடியில் நீச்சல் குளம் கட்டி மகிழ்ச்சியாக வாழும் அளவுக்கு பணக்காரர்களாக மாறப் போகிறோமா ? என்பது நமக்குப் புரியும். மொத்தத்தில் காசு மக்களே. காசு தான் எல்லாமே !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக