திங்கள், 27 அக்டோபர், 2025

GENERAL TALKS - நல்லதொரு உலகம் செய்வோம் !

 



ஒருவர் எந்தத் துறையில் ஈடுபட்டாலும், கலையை விட அறிவியலுக்கு எப்போதும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். காரணம், கலைத் துறையில் இருப்பவர்களுக்கு எப்போதும் அதிக வருமானம் கிடைப்பதில்லை. மேலும், அவர்களின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் எப்போதும் அதிர்ஷ்டத்தை மட்டுமே சார்ந்திருக்கும். அதாவது, நாம் அறிவியல் அடிப்படையில் ஏதாவது ஒன்றை முயற்சிக்கும்போது, ​​நமது தோல்விக்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவாகவே இருக்கும்.

எப்பொழுதுமே வாழ்க்கை அறிவியலின் அடிப்படையில் பிரித்து வாழ்க்கையை கற்றுக்கொள்ள வேண்டும். உணர்ச்சிவசங்களின் வகையில் வாழ்க்கையின் கண்ணோட்டத்தைப் பார்ப்பது கலைத்துறையில் இருப்பவர்களின் வாழ்க்கையாக இருக்கிறது. 

ஆனால் உணர்ச்சிவசப்பட்டால் இங்கே ஜெயிக்கவே முடியாது என்றும் பணத்தை சம்பாதிக்க முடியாது என்றும் சேர்த்து வைத்த பணம் ஒரு கட்டுப்பாடு இல்லாமல் வெளியில் செலவாகிவிடும் என்றும் நடப்பு விஷயங்களை எல்லாம் நன்றாக தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் அறிவியல் சார்ந்த கண்ணோட்டத்தில் மட்டுமே இந்த உலகத்தை பார்க்க வேண்டும்.

நிச்சயமாக, அரசியலில் தகுதி பெற்றவர்கள் மட்டுமே நல்லவர்களாக மட்டுமே ஆட்சியில் இருக்க வேண்டும்,  நடப்பு ஆட்சியில் நல்ல அளவுக்கு பொருளாதாரம் வளர்ந்துள்ளது. இதை கவனிக்காமல் நடிகர்களும் அரசியல் அதிகாரத்தில் அமர்ந்திருப்பதைப் பார்க்க சினிமா தரும் போதை மயக்கத்தில் ரசிகர்கள் விரும்புவது மிகவும் தவறு. \
இத்தனை வருடங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் நடிகர்களை கட்டுப்படுத்துகிறார்கள் இன்னும் கட்டுப்படுத்துவார்கள். முட்டாள் ரசிகர்கள் ஒரு நடிகரின் கால்களைத் தொட விரும்பினாலும் ஆச்சரியப்பட முடியவில்லை, மூளையை கழற்றி வைத்துவிட்டு அவரை வணங்குவார்கள். கலைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா? அல்லது அறிவியலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா? இதுதான் நாம் தேர்வு செய்யக் காரணம் !

கருத்துகள் இல்லை:

கதைகள் பேசலாம் வாங்க - 10

  ஆங்கில பாடகர் அகான் 2000-களின் நடுப்பகுதியில் ரிங்டோன் விற்பனையில் மிகவும் வெற்றி கண்டார் இந்த விற்பனையில் ஒரு சின்ன நுணுக்கத்தை  கவனித்தத...