ஞாயிறு, 26 அக்டோபர், 2025

GENERAL TALKS - கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள் உங்களுக்காக !



நம்முடைய மனது எப்போதுமே நம்மை பாதுகாப்பாக இருக்க சொல்லி வற்புறுத்தும். ஆனால் சில நேரங்களில் நம்முடைய மனது சொல்வதை கேட்கக்கூடாது. நம்முடைய பாதுகாப்புகள் காம்ப்ரமைஸ் செய்யப்பட்டாலும் நாம் வாழ்க்கையில் ஒரு போட்டி என்றால் அந்த போட்டியில் இறங்கி வேலை பார்த்து ஜெயித்துக்காட்ட வேண்டும். இல்லை என்றால் நம்முடைய மதிப்பு குறைந்துவிடும். பிற்காலத்தில் யாருமே மதிக்கவும் மாட்டார்கள். 

நீங்கள் இந்த ஆறுதல் மண்டலம் என்று அழைக்கப்படும் விஷயத்தை கவனமாகப் பின்பற்ற வேண்டும். ஆறுதல் மண்டலம் என்பது நீங்கள் எப்போதும் ஒரு குறிப்பிட்ட சிறிய இடத்திற்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்தால் உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்ற உணர்வாகும்.

சண்டையில் கிழிந்து போகாத சட்டை எங்கே இருக்கிறது ? என்று காயங்கள் பட்டாலும் கூட இந்த உலகத்தின் சண்டையில் நீங்கள் இறங்கி சண்டை போட்டால் மட்டும் தான் உங்களுடைய அனுபவங்கள் அதிகமாகும். உங்களால் வாழ்க்கையில் எந்தவிதமான பிரச்சனைகளையும் சமாளிக்க முடியும் என்ற துணிவு உங்களுக்கு வரும்.

உங்களுக்கென்று ஒரு பிரச்சனைகள் இருக்கும். உங்களுக்கென்று கடினமான விஷயங்கள் என்று எவ்வளவோ இருக்கும். இதனையெல்லாம் கடைசி வரையில் வாழ்க்கையில் தொட்டுப் பார்க்கவே முடியவில்லை என்றால் உங்களால் கடைசி காலத்தில் வாழ்க்கையில் நிம்மதியாக வாழ முடியாது. 

இப்போதே உங்களுடைய பிரச்சினைகளை கவனியுங்கள். இறங்கி நின்று போராடி உங்களுடைய பிரச்சினைகளை தீர்த்து காட்டுங்கள். உங்களின் எதிரிகளையும்.அவர்களுடைய சூழ்ச்சிகளையும் முறியடித்து காட்டுங்கள். அப்போதுதான் உங்களுடைய பலம் உங்களுக்கு புரியும். ஒரு சராசரி மனிதனாக வாழ்வதைவிடவும் அரசனாக வருவது மிகவும் சிறப்பானதாகும்.

இந்த பூமி கடுமையாகப் போராடுபவர்களுக்குச் சொந்தமானது. இங்கு வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. இந்த வாய்ப்புகளை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கதைகள் பேசலாம் வாங்க - 5

ஒரு சிலையை சுத்தியலால் அடித்து செதுக்கும்போது, ​​அந்தச் சிலையின் கடைசி அடியிலேயே அந்தச் சிலை சரியாக வடிவமைக்கப்பட்டால், சுத்தியலின் உரிமையாள...