வெள்ளி, 24 அக்டோபர், 2025

GENERAL TALKS - இதுதான் எங்கள் உலகம் !



ஒரு பக்கம் பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேண்டுமா என்பது போல நம்முடைய பழைய அரசரின் பாடல்களை மட்டும் எடுத்து போட்டதாக திரைப்படங்களுக்கு கார்பரேட் கேட்டுக்கொண்டிருப்பது சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இந்த காலத்தில் சிந்திக்க வேண்டிய விஷயங்கள் நிறையவே இருக்கிறது. நம் உலகத்தைப் பாருங்கள், இந்த உலகில் யாராவது தோல்வியடைந்தால், யாராலும் அவர்களைக் காப்பாற்ற முடியாது, அவர்கள் அங்கீகரிக்கப்படாமல் போய்விடுகிறார்கள். இவ்வளவு சோகமான சூழ்நிலைக்குக் காரணம், தோல்வியடைந்தவர்களுக்கு அவர்களின் இளமைப் பருவத்தில் சரியான அனுபவமும் அறிவும் கிடைக்காததுதான். அல்லது அவர்கள் பெறும் கல்வி சாதாரணமானது. சிறப்பான வாழ்க்கை அனுபவ அறிவுடன் கூடிய படிப்பு அவர்களுக்கு கிடைக்கவில்லை என்பதுதான் இந்த வலைப்பூவின் கருத்து. படிப்பு சொல்லிக் கொடுக்கக் கூடிய இடங்கள் மேம்படுத்தப்படவேண்டும். அதாவது இதுவரையிலும் இருக்கக்கூடிய பாட புத்தகங்கள் எல்லாமே மிகவும் பேசிக்கான விஷயங்களை மட்டும் தான் கவர் செய்கிறது. மேலும் படிப்பு சொல்லிக்க்கூடிய இடங்களும் இளம் தலைமுறையினரை சுயமாக சிந்திக்க அனுமதிப்பதில்லை. ஏதேனும் ஒரு நிறுவனத்தில் நன்றாக வேலை செய்வதற்கு.தயார் செய்து கொண்டிருக்கிறது என்பதுதான் இந்த வலைப்பூவின் கருத்து. ஒரு மருத்துவர், ஒரு பொறியாளர், ஒரு கணக்காளர் போன்றவர்கள் இதுபோன்ற வேலைகளைச் செய்யக்கூடியவர்கள், எப்போதும் தங்கள் வேலையில் தவறுகளை அனுபவிப்பதில்லை. ஆனால், பள்ளிகளையும் பாடங்களையும் நடத்தும் பேராசிரியர்கள் தங்கள் பாடங்களை நடத்தும் பணியில் குறைபாடுகளைக் கொண்டிருக்க நிர்வாகம் இன்னும் அனுமதிக்கிறது. குறைகள் இருக்க கூடிய பாடத் திட்டங்களையும் குறைகள் இருக்க கூடிய பகுத்தறிவையும்.கற்றுக்கொள்ள கூடிய இளைய தலைமுறைகள் அதனை பெரிதாக கண்டுகொள்வதுமில்லை. வருங்காலத்தை தங்களுடைய சொந்த.அனுபவங்களின் தொகுப்பாக இருந்து அவற்றின் மூலமாக கிடைக்கும் பகுத்தறிவின் காரணமாகவே இருந்த இளைஞர்கள் கடக்கின்றனர். ஒரு சில பேருக்கு படிப்பை தவிர்த்து வேலை செய்யும் இடங்களில் தேவைப்படுவதற்கு கூடிய அறிவையும், தகுதியையும் வளர்த்துக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் அமைவதில்லை.அவர்கள் சமூகத்தின் கடைநிலைக்கு மிகவும் எளிதாக சென்றுவிடுகின்றனர். நாட்டில் இருக்கக்கூடிய குற்றங்களை குறைக்க வேண்டுமென்றால் கடினமான சட்ட திட்டங்களை அமல்படுத்துவது தற்காலிகமான தீர்வாகத்தான் இருக்க முடியும். உண்மையாகவே குற்றங்களை குறைக்க வேண்டும் என்றால் நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் பணக்காரர்களாக வசதி வாய்ப்பு இருப்பவர்களாக வாழ்க்கை தரம் உயர்ந்தவர்களாக மாற்ற வேண்டும். அப்படி மாற்றினால் தான்.யாருக்குமே குற்றம் செய்வதற்கான தேவைகள் இருக்காது. நாடு நன்றாக இல்லை என்றால் நம்முடைய படிப்பு தான் நமக்கு நன்றான வாழ்க்கையை உருவாக்க சரியான அறிவுத்திறனை நமக்கு கொடுக்கிறது. அப்படிப்பட்ட படிப்பு என்ற விஷயமே கொஞ்சம் கொஞ்சம் குறைகள் இருக்க கூடிய விஷயங்களாக இருந்துவிடக் கூடியது என்று என்னைக்குமே நாம் அனுமதிக்க கூடாது.

கருத்துகள் இல்லை:

GENERAL TALKS - 001

நம்பிக்கை என்பது வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு கருத்து. நம்பிக்கை இல்லையென்றால், நம்மைச் சுற்றியுள்ள மக்கள் மீதோ, நாம் எடுக்கக்கூடிய செயல்...