செவ்வாய், 28 அக்டோபர், 2025

கதைகள் பேசலாம் வாங்க - 7

 



நம்முடைய வாழ்க்கையை சூழ்நிலைகளின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை நாம் எப்பொழுதுமே அறிய மறுத்து விடுகிறோம். சூழ்நிலைகளையும் அவைகளில் செய்யப்படும் மாற்றங்களையும் விடுத்து  தனியாக இயங்கியே  நம்மால் அதிகமாக போட்டிகளை ஜெயித்துவிட முடியும் என்று பல கனவுகள் காண்கிறோம். 

ஆனால் போதுமான பலம் இல்லை என்றால் சூழ்நிலைகள்தான் நம்மை கட்டுப்படுத்தும்  தவிர்த்து நம்மால் நம்முடைய வாழ்க்கையில் சூழ்நிலைகளை கட்டுப்படுத்த முடியாது. வெயில் காலத்தையும் மழை காலத்தையும் கட்டுப்படுத்த முடியாது என்பது போல நம்மால் சூழ்நிலைகளை கட்டுப்படுத்த முடியாது.

ஒரு அறிஞரிடம் சென்ற ஒரு இளைஞர் தன்னுடைய பலத்தின் மூலமாக மட்டுமே வாழ்க்கையின் எல்லா இடர்களையும் சாதித்து விடலாம் என்ற கருத்தை முன்மொழிந்தார். 

ஆனால் அந்த அறிஞர் என்ன சொன்னார் தெரியுமா? எப்பொழுதுமே சுற்றுச்சூழல் தான் நம்முடைய வாழ்க்கை கட்டுப்படுத்துகிறது. ஒரு சமதளமான பாதையில் வைக்கப்படும் இரும்பு பந்து யாராலும் நகர்த்த முடியாததாக இருக்கிறது. 

அதுவே அந்த பந்து சரிவான தளத்தை கொண்டுள்ள ஒரு மலையில் இருந்து உருட்டி விடப்பட்டால் அந்த இரும்பு உலோகத்தால் ஆன பந்து தனது எடையையும் மீறி அதிகப்பட்சமான வேகம் எடுத்து சூழ்நிலையால் நகர்த்தப்படுகிறது. 

உண்மையை சொல்ல போனால் அது எந்த வகையிலும் தன்னுடைய தன்னிச்சையான சக்திகளால் தள்ளி விடப்படுவதில்லை. சூழ்நிலைகள் மாறும்பொழுது அந்த பந்து இருக்கும் இடம் குறிப்பாக அந்த புவி ஈர்ப்பு விசையின் புள்ளி மாறும் பொழுது உடனடியாக அனைத்துமே மாறிவிடுகிறது. பந்து முடுக்கம் பெற்று ஒரு சமதள பரப்பை நோக்கி நகர்கிறது !  

இதுதான் சூழ்நிலைகளை மாற்றுவதன் மூலமாக ஜெயிப்பதற்கான டெக்னிக்கின் அடிப்படையாக இருக்கும். ஆகவே ஒரு மனிதன் எப்பொழுதுமே தன்னுடைய சொந்த சக்தியை மட்டுமே அளவீடாகக் கொண்டு வேலைகளில் இறங்குவது சுமாரான விஷயங்களாகத்தான் கருதப்படும் என்று கூறினார்

கருத்துகள் இல்லை:

கதைகள் பேசலாம் வாங்க - 10

  ஆங்கில பாடகர் அகான் 2000-களின் நடுப்பகுதியில் ரிங்டோன் விற்பனையில் மிகவும் வெற்றி கண்டார் இந்த விற்பனையில் ஒரு சின்ன நுணுக்கத்தை  கவனித்தத...