சமீபத்தில் நான் இந்த படத்தைப் பார்க்க நேர்ந்தது. விஜய் வசந்த் இந்த கதாநாயகராக படத்தில் நடித்தார். இந்தப் படத்தின் கதை, ஒரு சராசரி ஏழை மனிதரான வசந்த், தன்னுடைய தாயின் மறைவுக்கு பிறகு தன்னுடைய காதலியை காப்பாற்ற அதிகமான பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற காரணத்துக்காக நிறைய இடங்களில் பணம் தேடிக் கொண்டிருக்கிறார்
சமீபத்தில் எதேச்சையாக சந்தேக நபரிடமிருந்து கிடைக்கும் ஒரு ஒரு அதிர்ஷ்ட வாய்ப்பின் மூலம், குறைந்த வருமானம் கொண்ட தனது சுவரொட்டி ஒட்டும் தொழிலிலிருந்து கடத்தல் தொழிலுக்கு மாறுவதை தன்னை வறுமையில் இருந்து எடுக்கும் வாய்ப்பாக கருதுகிறார்.
ஆனால் எதிர்பார்த்தபடி விஷயங்கள் நடக்கவில்லை. அவருடைய வாழ்க்கையில் ஒரு பெரிய ஆபத்தை எதிர்கொள்கிறார். இந்த ஆபத்திலிருந்து அவன் எப்படி வெளியே வருகிறார்? அவன் தன் காதலையும் காப்பாற்றுகிறார், இந்தப் படத்தின் கதை சொல்லப்படுகிறது.
இசைய காட்சியமைப்பு வசனங்கள் எந்த வகையிலும் குறை வைக்காத ஒரு படமாக இந்தப் படத்தை எடுத்துக் கொள்ளலாம். பட்ஜெட் படமாக இருந்தாலும் இந்த படத்தின் கேரக்டர்கள் உடைய தன்மையை மிகவும் சரியானதாக பயன்படுத்தி இருக்கிறார்கள். ஒரு கமர்சியல் படமாக இருந்தாலும் சரியான அளவில்.அடுத்தடுத்து என்ன நடக்கப் போகிறது என்று கெஸ் செய்ய முடியாத அளவுக்கு திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார்கள் இந்த படத்தை கண்டிப்பாக எல்லோரும் ஒருமுறை பார்க்கலாம். தாராளமாக பாருங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக