இந்த படத்தை பற்றி என்ன சொல்வது ? இது புராணக் கதைகள், சாகசம் மற்றும் சூப்பர் ஹீரோ அம்சங்களை இணைத்து ஒரு பிரமாண்டமான திரையரங்க அனுபவத்தை வழங்குகிறது.
பிரம்மாஸ்திரம் படம் போல மொக்கையாக கொண்டு போகாமல் சூப்பர் திரைக்கதையோடு கார்த்திக் கட்டமநேனி இயக்கிய இந்தப் படத்தில், தேஜா சஜ்ஜா "வேதா" என்ற புனித பிறவி இளைஞராக நடித்துள்ளார்.
இவர் மன்னர் அசோகனின் மாய சக்திகளை அடக்கிய மர்ம புத்தகங்களை பாதுகாக்க தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு வீரர். அந்த புத்தகங்கள் நித்திய ஜீவனின் ரகசியங்களை கொண்டுள்ளன. கதையின் பின்னணி ஒரு புராண-அதிநவீன உலகமாக அமைந்துள்ளது,
இதில் வேதா தனது சக்திகளை விழிப்பூட்ட வேண்டும் மற்றும் "மஹாவீர் லாமா" (மஞ்சு மனோஜ்) என்ற மாயாஜாலம் கற்று தெரிந்த கொடூர வில்லனை எதிர்கொள்ள வேண்டும். ஜகபதி பாபு, ஷ்ரியா சரண், ஜெயராம் மற்றும் ரிதிகா நாயக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இரண்டரை மணி ஓடும் இந்த திரைப்படம், ஆழமான ஆன்மீக கருத்துகள், அதிரடி காட்சிகள் மற்றும் கண்கவர் ஒளிப்பதிவுகளுடன் கொஞ்சம் எண்டர்டெயின்மெண்ட்க்கு மரியாதை கொடுத்து வெளிவந்ததால் சூப்பர் ஹிட்டாக இப்போது வலம் வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக