திங்கள், 27 அக்டோபர், 2025

GENERAL TALKS - கொஞ்சம் வாழ்க்கை கொஞ்சம் கனவுகள் ! #3

 



நம் வாழ்க்கை சில சமயங்களில் நம் மீது விதிக்கும் அதிகப்படியான கட்டுப்பாடுகள் மற்றும் வரம்புகளைப் பற்றி நாம் எப்போதும் அறிந்திருக்க வேண்டும். நம்முடைய வாழ்க்கையில் கெட்ட நேரம் வரும்பொழுது நண்பர்கள் அனைவருமே எதிரிகளாக மாறிவிடுவார்கள். அதுவே நல்ல நேரம் நடந்து கொண்டிருந்தால் எதிரிகள் கூட நண்பர்களாக மாறி விடுவார்கள். இந்த விரோதமும் நட்பும் மிகவும் தற்காலிகமானது. ஆகவே நம்முடைய வாழ்க்கையில் இருக்கிறது. மனிதகுலத்தைப் பற்றிய ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், வாழ்க்கை என்பது ஒருபோதும் ஒரு புத்தகத்தில் விவரிக்கப்படக்கூடிய ஒரு கருத்து அல்ல. வாழ்க்கை என்பது ஒரு பெரிய கருத்து. அதை அனுபவத்தின் மூலம் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். புத்தக அறிவின் மூலம் அல்ல, ஆனால். வீடியோக்கள் மூலம் கற்றுக்கொள்வது கடினம். 

காலங்களும் மாறுகிறது. காட்சிகளும் மாறுகிறது. மனிதர்களுடைய வாழ்க்கை பின்னடைவை தான் சந்திக்கிறதே தவிர்த்து முன்னேற்றத்தை அடைந்த பாடில்லை.நிறைய தொழில்நுட்பங்கள் வந்துவிட்டது. ஆனால் அவை அனைத்துமே பணம் படைத்தவர்கள் மட்டுமே சாதகமாக.விளையாடிக் கொண்டிருக்கிறது. பணம் இல்லாதவர்கள் இன்னுமே கஷ்டப்படத்தான் செய்கிறார்கள். வெற்றி அனைத்துமே யோசித்துப் பார்த்தாலும் கடவுள் நிறைய நேரங்களில் மற்றவருடைய கஷ்டத்தை நீக்க முயற்சி செய்பவர்களுக்கு போதுமான சப்போர்ட்டை செய்வதில்லை என்பதுதான் மனக்குறையாக தோன்றுகிறது. இந்த விஷயங்கள் எல்லாம் எங்கே சென்று முடியப்போகிறதோ என்பது கடவுளுக்கு மட்டுமே வெளிச்சம்.




கருத்துகள் இல்லை:

கதைகள் பேசலாம் வாங்க - 10

  ஆங்கில பாடகர் அகான் 2000-களின் நடுப்பகுதியில் ரிங்டோன் விற்பனையில் மிகவும் வெற்றி கண்டார் இந்த விற்பனையில் ஒரு சின்ன நுணுக்கத்தை  கவனித்தத...