ஞாயிறு, 26 அக்டோபர், 2025

GENERAL TALKS - மனதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவாருங்கள் !




இந்த காலத்து இளைஞர்கள் புரிந்துகொள்ள வேண்டிய நம்முடைய வாழ்க்கைக்கு தேவைப்படும் முக்கியமான ஒரு கருத்து என்னவென்றால் நாம் எப்பொழுதுமே எமோஷன்ங்களை அடிப்படையாக கொண்டு முடிவுகளை எடுக்க முடியாது. 

எல்லா எமோஷன்களையும் ரியாக்ஷன்ங்களாக காட்டிக் கொண்டே இருக்கவும் கூடாது. இவைகள் இரண்டுமே தவறான விஷயங்கள் ஆகும். யாருக்கு தெரியும் இந்த விஷயங்கள் உங்களுடைய மிகப்பெரிய பலவீனமாக கூட இன்று வரை இருந்திருக்கலாம். ஆகவே இன்று முதல் இந்த பலவீனத்தை நீங்கள் தூக்கி எறியுங்கள்

நாம் ஒவ்வொரு உணர்வுகளுக்கும் தேவைப்படக்கூடிய உடனடி வெளிப்பாட்டை கொடுத்துக் கொண்டே இருந்தால் சராசரி மனிதர்களைப் போல நாமும் தோல்விகள் காயங்கள் இருக்கக்கூடிய ஒரு வாழ்க்கையைத்தான் வாழ்ந்து கொண்டிருப்போம். 

எப்பொழுதுமே உணர்வுகளின் அடிப்படையில் யோசிக்க கூடாது. அறிவு பூர்வமாக மட்டுமே யோசிக்க வேண்டும். நம்முடைய மூளை என்ன சொல்கிறதோ அதனையே தான் இந்த காலத்தில் கேட்க வேண்டுமே தவிர்த்து இதயம் என்ன சொல்கிறதோ அதனை பற்றி நினைத்து கவலைப்படுவதற்கு அதிகமான நேரத்தை கொடுக்க வாழ்க்கை இப்போது எல்லாம் அனுமதிப்பது இல்லை.

=கோபத்தில் ஸ்மார்ட் போனையும் வீட்டில் இருக்க கூடிய பர்னிச்சர்களையும் தாறுமாறாக சிதறு தேங்காய் போல உடைக்கக்கூடியா ஆட்களை நான் பார்த்திருக்கிறேன். இவர்களைப் பொறுத்தவரையில் பொருட்களை உடைப்பது கோபத்துக்கான சரியான வெளிப்பாடு என்றும், அதன் மூலமாக தங்களை சுற்றி இருப்பவர்கள் தங்களுடைய உணர்வுகளை புரிந்து கொள்வார்கள் என்றும் நினைக்கிறார்கள். ஆனால் அதுதான் தவறானது. 

இங்கே உணர்ச்சி வசப்படுவது நம்முடைய புத்தியை மட்டுப்படுத்துகிறது. நம்முடைய புத்தி எந்த அளவுக்கு கூர்மையாக வேலை செய்கிறதோ அந்த அளவுக்கு தான் நம்முடைய வெற்றிகள் இருக்கும். நம்முடைய புத்தியை போர்வாள் போல வைத்திருக்க வேண்டுமென்றால் உணர்வுகளை நீங்கள் கட்டுப்பாடாக வைத்திருக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கதைகள் பேசலாம் வாங்க - 5

ஒரு சிலையை சுத்தியலால் அடித்து செதுக்கும்போது, ​​அந்தச் சிலையின் கடைசி அடியிலேயே அந்தச் சிலை சரியாக வடிவமைக்கப்பட்டால், சுத்தியலின் உரிமையாள...