ஞாயிறு, 26 அக்டோபர், 2025

கதைகள் பேசலாம் வாங்க - 5

ஒரு சிலையை சுத்தியலால் அடித்து செதுக்கும்போது, ​​அந்தச் சிலையின் கடைசி அடியிலேயே அந்தச் சிலை சரியாக வடிவமைக்கப்பட்டால், சுத்தியலின் உரிமையாளருக்கு முதல் அடிக்கே உரிய மரியாதை கிடைக்கும் என்று ஒரு கோட்பாட்டைப் படித்தேன். முதன்முறையாக ஏதாவது செய்யும்போது, ​​அது நிச்சயமாக தோல்வியடையும் என்று பலர் கூறுகிறார்கள். உதாரணமாக, இந்தியாவில் முதன்முறையாக கார்களை தயாரித்து வெளியிட டாடா நிறுவனத்தின் ஐகானிக் முயற்சி ஆரம்ப கட்டத்தில், இந்தியா வெளிநாட்டு கார்களை மட்டுமே விரும்பி விற்பனை செய்தது. ஆனால். உள்நாட்டு கார்களை தயாரிப்பது பற்றி யாரும் யோசிக்கவில்லை. 

உள்நாட்டு கார்களைப் பொறுத்தவரை அப்படிப்பட்ட பேச்சு எதுவும் மக்களிடம் இல்லவே இல்லை. அத்தகைய சூழ்நிலையில், டாடா நிறுவனம் உள்நாட்டு கார்களை தயாரிக்க களத்தில் இறங்கியபோது, ​​அந்த நிறுவனத்திற்கு யாரும் ஆதரவாக இல்லை. 

குறிப்பாக சொல்லப்போனால் எல்லோரும் அந்த நிறுவனம் அடைய நினைத்த அந்த கனவுக்கு அந்த இடத்திற்கு எதிராக இருந்தனர். குறிப்பாக டாடாவின் நண்பர்கள், இது ஒரு தவறான முடிவு என்று அவரிடம் சொன்னார்கள். ஆனால் உண்மையில் இந்த திட்டத்தில் வெகுவான நம்பிக்கை மற்றும் விடாத முயற்சியில் முதல் படியிலிருந்து கடைசி படி வரை அனைத்தும் டாடா நிறுவனத்தால் பார்த்து பார்த்து கார்கள் செய்யப்பட்டது, இந்த துணிவான முடிவுகள்தான் இப்போது கார் உற்பத்தியில் டாடா முன்னணி நிறுவனமாக உள்ளது. மற்றவர்கள் அவர்களின் வார்த்தைகளைக் கேட்டிருந்தால். இதில் எதுவும் நடந்திருக்காது, இல்லையா?

பயப்படுபவர்களைப் பார்த்து நாமும் பயந்தே வாழவேண்டும் என்று சொல்லுபவருக்கு கண்களை விழித்து உலகத்தை பார்ப்பது கூட ஒரு சாதனைதான் என்பதை போலத்தான் உலகத்தை அவர்கள் அறிவார்கள். உண்மையில், எந்த சாதனையை செய்வதற்கும் சரியான திட்டமும் சரியான கொள்கையும் நம்மிடம் இருந்தால், சரியான கட்டுப்பாட்டின் மூலம், எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும், நம் இலக்கை அடைய முடியும்.

கருத்துகள் இல்லை:

கதைகள் பேசலாம் வாங்க - 5

ஒரு சிலையை சுத்தியலால் அடித்து செதுக்கும்போது, ​​அந்தச் சிலையின் கடைசி அடியிலேயே அந்தச் சிலை சரியாக வடிவமைக்கப்பட்டால், சுத்தியலின் உரிமையாள...