சனி, 4 அக்டோபர், 2025

மேம்பட வேண்டும் வாழ்க்கை முறைகள் ! - #1

 


பெரும்பாலான நேரங்களில், நாம் கடனில் சிக்கும்போது, ​​கடனின் தாக்கம் மிகவும் அதிகமாகி, வாழ்க்கையில் எதையும் அனுபவிக்க முடியாமல் போகும். கடன்களுக்குள்ளே கடினமான வகையில் சிக்கித் தவிக்கும் போது மட்டும் தான் இந்த தவிப்புகள் நம்முடைய கண்களுக்கு தெரியுமே தவிர்த்து.சரசரியாக வாழ்க்கையில் இந்த வகையான விஷயங்கள் நம்முடைய கண்களுக்கு தெரியாது. கடன்கள் இருக்கும்போது, ​​நம் வாழ்க்கை மிகவும் பாதிக்கப்படுகிறது. நிம்மதியாக ஒரு படம் கூட பார்க்க முடியவில்லை. இந்த 3 மணி நேர இடைவெளி கூட கடனை எப்படி அடைப்பது? எப்படி அந்தக் கடன்களை எப்படி அடைப்பது ? என்பது நம் மனதில் திரும்ப திரும்ப எழும் கேள்வி நம்மை நிம்மதியற்ற மனிதனாக மாற்றிவிடுகிறது.


அப்படியிருந்தும், இவை ஒரு வகையில் நமக்கு நல்லதுதான். நம் வாழ்வில் இதுபோன்ற கஷ்டங்களைக் கண்டால் மட்டுமே வாழ்க்கையின் தன்மையைப் புரிந்துகொள்ள முடியும். வாழ்க்கை அனைவருக்கும் பொதுவானது அல்ல, வாழ்க்கையில் நாம் ஏதோ ஒரு வகையில் துன்பப்பட வேண்டும். கடனை அடைப்பதில் நமது வாழ்க்கை முறையை மாற்றுவது மிக முக்கியமான பகுதியாகும். கடனுக்கு முன்பு இருந்ததைப் போலவே நமது வாழ்க்கை முறைகளும் எப்போதும் இருந்தால், கடன் தொடர்ந்து அதிகரிக்கும். அதனால்தான் கடனை அடைப்பதற்கான சரியான தீர்வு, நமது வாழ்க்கை முறைகளில் தேவைப்படக்கூடிய மாற்றங்களை ஆராய்ந்து, நிஜ வாழ்க்கையில் அத்தகைய மாற்றங்களைச் செயல்படுத்துவதாகும்.

கருத்துகள் இல்லை:

generation not loving music