ஞாயிறு, 26 அக்டோபர், 2025

கதைகள் பேசலாம் வாங்க - 3

நமக்குப் பிடிக்காத விஷயங்களைச் செய்வது நமக்குப் பெரிய வெற்றியைத் தரும். உதாரணமாக, சமீபத்தில் விவேக் சொன்ன ஒரு விஷயம் இருக்கிறது. 

படிக்காதவன் என்ற திரைப்படத்தில் நடிகர் விவேக் மற்றும் தனுஷ் அவர்கள் இணைந்து நடித்த அசால்ட் ஆறுமுகம் என்ற கதாபாத்திரம் நகைச்சுவை என்ற ரீதியில் மிக சரியான அளவில் மக்களிடம் வரவேற்பை பெற்றது. 

ஆனால் இந்த படத்திற்கு அடுத்த படமாக விவேக் மற்றும் தனுஷ் ஆகியவற்றின் காம்போவின் வெளிவந்த இன்னொரு படமாக இருக்கக்கூடியதுதான் உத்தம புத்திரன் ஆனால் உத்தம புத்திரன் படத்தில் நடித்த விவேக் அவர்களுக்கு அந்த படத்தில் இருக்கக்கூடிய எமோஷனல் ஏகாம்பரம் என்ற கதாப்பாத்திரம் சுத்தமாக பிடிக்கவே இல்லையாம். 

ஏனென்றால் நிறைய முக்கியமான சீன்களில் எமோஷனல் ஏகாம்பரம் என்ற இந்த கதாபாத்திரத்திற்கு டயலாக் என்பதே இல்லை. அவர் அந்தக் காட்சியை நிதானமாக நிறுத்தி பார்த்துக்கொண்டே முகத்தில் ஒரு உறைந்த அதிர்ச்சியோடு இருப்பதாக இந்த படத்தின் விஷயங்கள் அமைந்திருக்கும்.

நடிகர் விவேக் அவர்கள் ஒரு கதாபாத்திரமாக அந்த படத்தின் எமோஷனல் ஏகாம்பரம் என்ற கதாபாத்திரம் மக்களுக்கு பிடிக்காமல் போவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது என்பதும், மேலும் ஒரு நடிகராக எந்த எக்ஸ்பிரஷன்யையும் வெளியிடாமல் ஒரு புதுமை கதா பாத்திரத்தை மக்களிடையே புரிய வைப்பது கடினம் என்பதையும் விவேக் அவர்கள் உணர்ந்திருந்தார்

தனுஷ் அவர்கள் கொடுத்த நம்பிக்கையில் விவேக் அவர்கள் சிரமப்பட்டு நடித்து வெளியே வந்த இந்த திரைப்படத்தில் இவருடைய நகைச்சுவைக் காட்சிகள் பெருமளவில் பாராட்டப்பட்டு பேசப்பட்டு வந்தது. ஆகவே நிறைய நேரங்களில் நமக்கு பிடிக்காது என்று நினைக்கக்கூடிய நிறைய காரியங்கள் நமக்கு வெற்றியை தேடித்தரக்கூடிய காரியங்கள் ஆக இருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கதைகள் பேசலாம் வாங்க - 5

ஒரு சிலையை சுத்தியலால் அடித்து செதுக்கும்போது, ​​அந்தச் சிலையின் கடைசி அடியிலேயே அந்தச் சிலை சரியாக வடிவமைக்கப்பட்டால், சுத்தியலின் உரிமையாள...