பள்ளிக்கூடம் படிக்கும்போது நம்முடைய கதாநாயகனுக்கு சக தோழியிடம் ஒரு சின்ன காதல் ஆசை உருவாகிறது. ஆனால் அந்த ஆசை ஒரு முழுமையான உண்மையான காதலாக மாறும்போது பழகிக் கொண்டிருக்கும் அந்த தோழி தன்னை ஏமாற்றுகிறார் என்றும் விளையாட்டுத்தனமாகத்தான் தன்னை காதலிப்பது போல நடிக்கிறார் என்றும் உண்மை தெரிய வரும் பொழுது கதாநாயகர் மனம் உடைந்து போகிறார்.
பல வருடங்கள் கடந்து கல்லூரி படிப்பை முடித்துவிட்டு திரைப்படத்துறையில் உதவி இயக்குநராக பணிபுரிய அனைத்து வேலைகளையும் செய்து கொண்டு இருக்கிறார். ஆனால் தனக்கான காதலை என்பவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ஒரு வரையறையை வைத்துக் கொண்டு இருக்கிறார். ஒரு கட்டத்தில் இந்த மாதிரியான தன்னுடைய.விருப்பங்களுக்கு.தகுந்தவாறு ஒரு பெண்ணை சந்திக்கும் போது உடனடியாக காதலில் விழுகிறா
இருந்தாலும் தன்னுடைய உதவி இயக்குனராக மாறும் பயணத்தில் இருக்கக்கூடிய வேலை பளுவின் காரணமாகவும், தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த சம்பவங்களின் காரணமாகவும் கதாநாயகர் யாரிடமும் மற்றவர்களின் மனதை புரிந்துகொண்டு பேசாமல் பழகாமல் எப்பொழுதும் கோபத்தை மட்டுமே காட்டக்கூடிய மற்றவர்களை பற்றி புரிந்துகொண்டு பேச தெரியாத ஒரு மனிதராக இருக்கிறார். இதனாலேயே அந்த தன்னுடைய காதலி எந்த அளவுக்கு அவனை கேரியரில் ஜெயிக்க சப்போர்ட் செய்திருந்தாலும் அவரை வெறுத்து அவருடைய காதலை விட்டுவிடுகிறான்.
இவ்வாறு பிரிந்த நம்முடைய கதாநாயகனின் இரண்டாவது காதல் உண்மையான காதலாக இருப்பதால், கடைசியில் இவர்கள் இருவரும் ஒன்று சேர்வார்களா? இல்லை என்றால் இந்த பிரிவுக்கு நியாயமான விஷயம் ஏதேனும் நடக்குமா என்பது தான் இந்த படத்தின் கதையாக இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக