இந்த படத்தை பற்றி சொல்லலாமா ? என்னது சான்டா கிளாஸ் தக்கப்பட்டாரா ? இது ஒரு கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் ரசிகர்களுக்கு அந்த சூழலுடன் கூடிய மாடர்ன் கதைக்களம் இருக்கும் அதிரடி நகைச்சுவை திரைப்படமாகும்,
இது கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டு சான்டா கிளாஸ் கதைகளை உண்மையாக மாற்றி பின்னதாக உலகம் முழுவதும் நடைபெறும் ஒரு மீட்பு பயணமாக மாற்றுகிறது.
ஜேக் காஸ்டன் இயக்கிய இந்தப் படத்தில் நமது ராக் நடிகர் ட்வெய்ன் ஜான்சன் "காலம் டிரிப்ட்" என்ற வடதுருவ பாதுகாப்பு தலைவராக நடித்துள்ளார். அவர், பிரபல ஹேக்கரும், பரிசுக்கான வேட்டையாடுபவருமான "ஜாக் ஓ'மாலி" (கிரிஸ் எவன்ஸ்) உடன் சேர்ந்து, மர்மமாக கடத்தப்பட்ட சாண்டா கிளாஸை மீட்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். இந்த பயணத்தில் அவர்கள் மாய சக்திகள், ரகசிய அமைப்புகள் மற்றும் பரபரப்பான சாகசங்களை சந்திக்கிறார்கள்.
லூசி லியூ, கியர்னன் ஷிப்கா மற்றும் ஜே. கே. சிம்மன்ஸ் (சாண்டா) ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் குடும்பத்துடன் பார்க்க ஏற்றதொரு மகிழ்ச்சியான, அதிரடியான, பண்டிகை உணர்வை கொண்ட ஒரு பொழுதுபோக்கு படமாக அமைந்துள்ளது.
விமர்சனங்கள் ஆரம்பக் கருத்துகள் இதன் விளையாட்டுத்தனமான நடையை, நடிகர்களின் செயல்பாடுகளை மற்றும் குடும்பம் மையமாக உள்ள கதையை பாராட்டுகின்றன. இருந்தாலும் பாக்ஸ் ஆபீஸ் என்ற வகையில் பெரிய சாதனைகளை குவிக்க தவறவிட்ட ஒரு படமாக இதனை எடுத்துக்கொள்ளலாம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக